Actress Meena: நடிகை மீனாவின் மகளா இது.. தெறி பேபி நைனிகா எப்படி இருக்காங்க பாருங்க
தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த மீனாவின் மகள் புகைப்படம் சமூகவலைளத்தில் வைரலாகி வருகிறது. தெறி பேபி இப்போ பெரிய பொண்ணு என்றும் தெரிவிக்கின்றனர்.

தெறி படத்தில் குழந்தையாக நடித்த மீனாவின் மகள் நைனிகா தற்போது டீனேஜ் வயதை அடைந்துள்ளார். தற்போது மீனாவுடன் நைனிகா இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த மீனாவின் ரசிகர்கள் அவரது மகளா என கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். மீனாவை போன்று திரையுலகில் நடிகையாக வலம் வருவார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
கண்ணழகி மீனா
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென தனித்த அடையாளத்தை பதித்துள்ளார். மீனாவின் கண்களை வைத்தே கண்ணழகி என்றும் ரசிகர்கள் வருணித்தனர். அதேபோன்று முத்து படத்தில் ரஜினியுடன் தில்லானா தில்லானா பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். இது ரசிகர்களுக்கு பிடித்த எவர்க்ரீன் பாடலாகவும் இருக்கிறது. அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பாராட்டை பெற்று வருகிறார்.
கணவர் மரணம்
த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வந்த மீனாவிற்கு கணவரின் மரணம் அவரை உருக்குலைய வைத்தது. அவரது மரணத்தை வைத்து எழுந்த சர்ச்சைகளும் மிகப்பெரிய சோதனையை தந்தது. இதனைத்தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட மீனா கடைசியாக 2024-ம் ஆண்டு ஆனந்தபுரத்து டைரீஸ் என்ற மலையாள படத்தில் நடித்தார். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் சிறு கதாப்பாத்திரத்தில் வந்து சென்றார்.
மீனா மகள் நைனிகா
மீனா மகள் நைனிகா விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2016ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்களும் வெளியானது. இதைத்தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அமலா பாலுக்கு மகளாக நடித்தார். இப்படத்திற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த நைனிகா சினிமா பக்கமே முகம் காட்டாமல் இருந்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேரன் திருமணத்தில்
மீனா தனது மகள் நைனிகாவுடன் விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தெறி பேபியா இது
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெறி படத்தில் நடித்த பேபியா இது என நைனிகாவை பார்த்து கேட்க தொடங்கிவிட்டனர். அப்படியே மீனாவை போன்று இருப்பதாகவும், மீனாவை போன்று நைனிகாவும் சினிமாவில் வரும் காலத்தில் ஜொலிக்கலாம் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மீனாவும் நைனிகாவும் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மீனாவை போன்று தென்னிந்திய நடிகையாக வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





















