தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் நிலவரம் என்ன? - விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் இதுவரை 84.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர் பேட்டி அளித்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

“ திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கொரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி கொண்ட மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் நிலவரம் என்ன? - விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும், சென்னையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கார் ஆம்புலன்ஸ் சேவையையும் திருப்பூரில் தொடங்கி வைக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் மூலமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.
கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தும் தலைமை காவலர்
திருப்பூரில் ஆயிரம் படுக்கைகள் அளவுக்கு காலியாக உள்ளதால் பதற்றம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் 2.12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள 16 ஆயிரம் தடுப்பூசிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் செலுத்தப்படும்.

தமிழகத்திற்கு வந்துள்ள 95.5. லட்சம் தடுப்பூசிகளில் தற்போது வரையில் 84.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 லட்சம் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்துவதற்காக கையிருப்பில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வரும் 2 அல்லது 3 நாட்களில் மக்களுக்கு செலுத்தப்படும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் நிலவரம் என்ன? - விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுதவிர, தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளவிலான ஒப்பந்தம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில், ஒப்பந்தப் படிவங்களை ஜூன் 4-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், ஜூன் 5-ந் தேதி எந்த நிறுவனம் என்பது முடிவு செய்யப்பட்டு 6 மாதத்திற்குள் 3.5 கோடி தடுப்பூசிகளை அவர்கள் வழங்க வேண்டும் என்று விதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இசையோடு நண்பனை இறுதி வழியனுப்பல் - நெகிழ்ச்சியளிக்கும் வைரல் வீடியோ
மாநில அரசு ரூபாய் 85 கோடி செலுத்தி 23.5 லட்சம தடுப்பூசியை பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர, கூடுதலாக மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசியை பெறுவதற்காக முதல்வரின் உத்தரவின்பேரில் டி.ஆர்.பாலு எம்.பி.  ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியிலே தங்கி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவிலே உள்ளது. முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் கையிருப்பு தற்போது 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags: Vaccine Tamilnadu COVID coronavirus health minister

தொடர்புடைய செய்திகள்

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

கருப்பு ரேசன் அரிசிக்கு அதிமுக தான் காரணம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

கருப்பு ரேசன் அரிசிக்கு அதிமுக தான் காரணம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

டாப் நியூஸ்

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்