மேலும் அறிய

போலீஸ் ஸ்டேஷனா..? - திருமண மண்டபமா..? - ஒரே வாரத்தில் இத்தனை ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததா..?

கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வார காலத்தில் 10க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளால் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ராக்கிபட்டி காலனியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் தேசிய மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் ஜனார்த்தனனும், சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகள் உமா மகேஸ்வரியும், சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 

போலீஸ் ஸ்டேஷனா..? - திருமண மண்டபமா..? - ஒரே வாரத்தில் இத்தனை ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததா..?

அதேபோல, சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணாநகரை சேர்ந்த சௌந்தர் மகன் மேகவாசனும், ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகள் ரம்யாபிரபாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதேபோல ஓமலூர் அருகே உள்ள மஞ்சுளாயூர் பகுதியை சேர்ந்த மணியும், கருப்பூர் தட்டாஞ்சாவடியை சேர்ந்த உதயதனுஷாவும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டனர். அதேபோல சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த சக்கரவர்த்தியும், அதே பகுதியை சேர்ந்த கிருபாவும், கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். 

அதேபோல ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியை சேர்ந்த சில்லி சிக்கன் கடை நடத்தும் பூவரசனும், மல்ல கவுண்டனூரை சேர்ந்த அனிதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இவர்களும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், இன்று இந்த ஐந்து ஜோடிகளும் அடுத்தடுத்து பாதுகாப்பு கேட்டு, ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 

போலீஸ் ஸ்டேஷனா..? - திருமண மண்டபமா..? - ஒரே வாரத்தில் இத்தனை ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததா..?

பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் மோகனபிரியா. இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை அறிவியல் படித்து வருகிறார். அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள திண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கோகுல்ராஜ். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வழியில் சென்றுவரும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, வீட்டைவிட்டு சென்று நாமக்கல் அருகேயுள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், மகளை காணவில்லை என்று மகேந்திரன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து ஓமலூர் காவல்துறையினர் காதல் ஜோடிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்து, காதல் ஜோடிகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கோபத்துடன் காவல் நிலையம் வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்த சம்பவத்தினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் திருமண சேவை மையம் போல ஓமலூர் காவல் நிலையம் காட்சியளித்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget