மேலும் அறிய

ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை.. நல்ல செய்தி சொன்ன எல். முருகன்

அண்மையில் திருப்பூரில் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மருத்துவமனை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நல்ல செய்தி சொன்ன எல். முருகன்:

சென்னை கே. கே. நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (இஎஸ்ஐசிஎச்) நேற்று (07 ஜூலை) நடைபெற்ற பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நலமான பாரதம்  வளமான பாரதம் எனும் நல்வாழ்வு மருத்துவ பரிசோதனை முகாமை அமைச்சர் தொடங்கிவைத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை:

பின்னர் இஎஸ்ஐசி மருத்துவமனையில், பிரதமரின் திவ்யாஷா (மாற்றுத்திறனாளிகள்) மையத்தின் மூலம் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறும் பாதையில் பொருளாதார வளர்ச்சியில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார். 

இத்துடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதையும் மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் உறுதிசெய்துள்ளது என்று அவர் கூறினார். குறிப்பாக தொழிலாளர்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர்களின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும் உள்நோயாளிகளுக்கு 1000 படுக்கைகள் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பில் 50 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இம்மருத்துவமனை பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இஎஸ்ஐ மருத்துவக்காப்பீடு இல்லாத பொதுமக்களுக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய வயோஸ்ரி யோஜனா மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக உதவி உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதாக்கூறிய அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அண்மையில் திருப்பூரில் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மருத்துவமனை தொடங்கப்படும் என்றார். மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாடு அடைந்துள்ளது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் 20 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியிருப்பதாகவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுடன் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்துள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
TN Weather: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
MK STALIN: யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
Embed widget