Pradeep Ranganathan: பிரதீப்புக்கு அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. நெட்பிளிக்ஸ் மாஸ் டீல்.. பண மழைதான்
பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ட்யூட் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.

லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் எல்ஐகே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். பிரதீப் நடித்த முந்தைய படங்களை போன்றே இப்படமும் இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாக இருக்க வாய்ப்புள்ளது. விக்னேஷ் சிவன் ரொமாண்டிக்கான காதல் படங்களை காமெடியாக சொல்ல முயற்சிப்பார். அனிருத்தின் இசையும் பக்கபலமாக இருப்பதால் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என சொல்லலாம்.
எல்ஐகே ரிலீஸ் எப்போது?
எல்ஐகே படத்தின் தலைப்பில் இருந்தே பிரச்னை தொடங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா இருந்தாலே படம் பார்ப்பவர்களுக்கு எனர்ஜி கிடைக்கும். அவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும். இப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் கண்டிப்பாக ஷென்ஷேனலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீீப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 18ல் ரிலீஸ் ஆகிறது. டிராகனை போன்றே இப்படத்திலும் செஞ்சூரி அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் ரிலீசுக்கு முன்பே வசூல் மழை
எல்ஐகே படத்தை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்த்தில் உருவாகும் ட்யூட் படத்தில் பிரதீப் நடித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் தான் கீர்த்திஸ்வரன். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரமேலு புகழ் மமிதா பைஜூ இருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ட்யூட் திரைப்படம் படம் வெளியாவதற்கு முன்பே வணிக ரீதியாக பெரிய அளவில் வசூலை ஈட்டியிருக்கிறதாம். இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பெரிய லாபம் அடைந்திருக்கிறது.
பிரதீப்பிற்கு அடித்த ஜாக்பாட்
முன்னணி ஹீரோக்கள் படங்களை வாங்குவதற்கே தயங்கும் நிறுவனங்கள் பிரதீப் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் பிரதீப் நடித்த 2 படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. லவ் டுடே 50 கோடி வசூலை ஈட்டியது. டிராகன் 100 கோடி வசூலை ஈட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இதனை நம்பியே நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து ட்யூட் படத்தை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வெளியாகும் ட்யூட் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.





















