Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
Seeman Case: உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறத்தியதாகவும் பிரபல நடிகை அளித்த புகாரில், நா.த.க ஒருங்கிணைப்பாளருக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு , சென்னை வளசரவாக்கம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகை அளித்த புகாரில், வழக்கை 12 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், பிரபல நடிகை அளித்த புகார் வழக்கு தொடர்பாக , ஆஜராகுமாறு சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Also Read: அம்பேத்கர்-பகத்சிங் படங்களை பாஜக அகற்றியுள்ளது: சட்டசபையை முடக்கிய ஆம் ஆத்மி..பாஜக சொன்னது என்ன?
வழக்கின் பின்னணி:
கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, நீதிமன்றத்தின் உத்தரவானது, சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் விஜயலட்சுமி குடும்பத்தினர் சீமானை அணுகி உள்ளனர். சீமான், விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் விஜயலட்சுமியை சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானின் வற்புறுத்தலால் விஜயலட்சுமி ஏழு முறை கரு கலைப்பும் விஜயலட்சுமி செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம் இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார் என்றும் சீமானுக்கு எதிராக நடிகை புகாரளித்தார்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விஜயலட்சுமி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான்,புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். இந்நிலையில், சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

