PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
Longest Serving PM Modi: இந்தியாவில் நீண்ட நாள் பிரதமராக இருந்த இரண்டாவது நபர் என்ற இந்திரா காந்தியின் சாதனையை, நரேந்திர முறியடித்துள்ளார்.

Longest Serving PM Modi: சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமையும் மோடியையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரித்திரம் படைத்த பிரதமர் மோடி:
இந்திரா காந்தியை பின்னுக்கு தள்ளி, இந்திய வரலாற்றில் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்த இரண்டாவது நபர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இன்றுடன் (ஜுலை 25, 2025) அவர் பிரதமராகி 4 ஆயிரத்து 78 நாட்கள் முழுமையடைந்துள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1996ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தொடங்கி,1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை மொத்தம், 4 ஆயிரத்து 77 நாட்கள் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் பிரதமர் மோடி:
ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்ததோடு மட்டுமல்லாமல், மோடி பல வரலாற்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார். அதன்படி,
- சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் மற்றும் ஒரே பிரதமர்
- காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர்
- இந்தி பேசாத மாநிலத்திலிருந்து அதிக காலம் பதவி வகித்த பிரதமர்
- தொடர்ச்சியாக இரண்டு முழு பதவிக்காலங்களை நிறைவு செய்து, இரண்டு முறை பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே காங்கிரஸ் அல்லாத தலைவர்
- மக்களவையில் தனியாக பெரும்பான்மையைப் பெற்ற ஒரே காங்கிரஸ் கட்சியை சேராத தலைவர்
- 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் பிரதமர் மோடி ஆவார்.
- நேருவைத் தவிர, ஒரு கட்சியின் தலைவராக தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே பிரதமர் மோடி ஆவார்.
- நாட்டின் அனைத்து பிரதமர்கள் மற்றும் முதலமைச்சர்களில், ஒரு கட்சியின் தலைவராக தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே நபர் மோடி ஆவார்.
இந்திய அரசியல் நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸை, புறந்தள்ளி பல அளப்பரிய சாதனை பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்றம் டூ நாடாளுமன்றம்:
முதலில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். தொடர்ந்து 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளை குவித்தார். 2014 ஆம் ஆண்டில், அவர் முதல் முறையாக வாரணாசியில் இருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். மோடி 2019 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2024 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானார். அதேநேரம், முதல் இரண்டு தேர்தல்களில் கிடைத்த தனிப்பெரும்பான்மை, 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது பாஜகவிற்கு கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே தற்போது மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.





















