அண்ணா முதல் ஸ்டாலின் வரை: கோட் - சூட்டில் கவனம் பெறும் தமிழக முதல்வர்கள் ! - காரணம் என்ன ?
நாவலர் வி.ஆர்.நெடுஞ்செழியன் மேலை நாட்டு உடை அணியத்தொடங்கியதால் அவருக்கும் மற்றவர்களும் இடையில் எப்படியான இடைவெளி இருந்தது என்பது குறித்தும் கருணாநிதி தனது சுயசரிதையிலும் கூட எழுதியுள்ளார்.
சமீபத்தில் துபாய் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோட்-சூட் அணிந்த cool புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வேஷ்டி சட்டை என தமிழகத்தில் வலம் வரும் முதல்வரை கோட்-சூட்டில் பார்ப்பது இது முதல்முறை இல்லை என்றாலும் கூட வழக்கமான உடையில் இருந்து மேலைநாட்டு உடைகளுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக முதல்வர்கள் மாறும் பொழுது சற்று அதிகமாக கவனம் பெறுகிறார்கள்தானே.
தமிழகம் அன்று சென்னை மாகாணமாக இருந்த பொழுது முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற சி.ராஜகோபாலாச்சாரி, அதன் பிறகு வந்த படிக்காத மேதை என கொண்டாடப்படும் முதல்வர் காமராசர் இருவருமே அந்த காலக்கட்டத்தில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் பொழுது , கோட் -சூட்டிற்கு மாறவில்லை. மாறாக வழக்கமான தங்களின் உடைகளை அணிந்தே சென்றனர்.
ஆனால் அதன் பிறகு வந்த திராவிட கட்சிகளின் முன்னோடியாக கருதப்படும் அறிஞர் அண்ணா வந்த பிறகு வெளிநாட்டு பயணங்களுக்கு கோட்-சூட் அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 1968 ஆம் ஆண்டு அமெரிக்கா , ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்ற போது டையுடன் கலக்கலான சூட் அணிந்திருந்தார் அண்ணா. அவர் வழி வந்த முன்னாள் முதல்வர் கலைஞரும் , எம்.ஜி.ஆரும் மாஸாக கோட் சூட் அணிந்து வெளிநாடு சென்ற புகைப்படங்கள் இன்றும் அவர்களது பிறந்த நாட்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர் கோட் -சூட் அணிவதில் ஆச்சர்யமில்லை என்றாலும் கூட கலைஞர் அதிகமாக கவனம் பெற்றார். ஏனென்றால் அவர் இந்தியாவில் இருக்கும் பொழுது மேலை நாட்டு ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை . நாவலர் வி.ஆர்.நெடுஞ்செழியன் மேலை நாட்டு உடை அணியத்தொடங்கியதால் அவருக்கும் மற்றவர்களும் இடையில் எப்படியான இடைவெளி இருந்தது என்பது குறித்தும் கருணாநிதி தனது சுயசரிதையிலும் கூட எழுதியுள்ளார். மேலை நாட்டு ஆடை மோகத்தை அதிகம் விரும்பாத கருணாநிதி , 1970 ஆம் ஆண்டு பாரிஸில் நடைப்பெற்ற மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டிற்காக சென்ற போதும் அதன் பிறகு வாடிகனில் போப்பை சந்தித்திபோது கோட்-சூட் அணிந்திருந்தார். அதன் பிறகு மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றுவார சுற்றுப்பயணம் சென்ற கருணாநிதி அவர்கள் தமிழக பாரம்பரிய ஆடைகளை அணிந்துதான் சென்றார். என்ன வழக்கத்திற்கு மாறாக அந்த சமயத்தில் கழுத்து வரை பட்டன்களை அணிந்திருந்தார்.
இந்தியாவில் இருக்கும் பொழுது மேலை நாட்டு உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததுதான் முதல்வர்கள் வெளிநாடு செல்லும் பொழுது அணியும் உடைகள் அதிகம் கவனம் பெறுகிறது. முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவருமே 2019 ஆம் ஆண்டு கோட்-சூட் அணிந்திருந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் ஸ்டைலிஷ் லுக்கும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. . இந்த உடைகளை சென்னையில் புகழ்பெற்ற சையத் என்பவரால் வடிவமைத்தாக கூறப்படுகிறது.