மேலும் அறிய

Tamilisai On Vijay: "உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கும்” பாஜக மீது அட்டாக்? விஜயை பாராட்டிய தமிழிசை

Tamilisai On Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கொள்கைகளை, பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டியுள்ளார்.

Tamilisai On Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜகவை மறைமுகமாக சாடியதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் டிவீட்:

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. விஜய் அவர்களின் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சில நிகழ்வுகள் நடந்ததற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உதாரணத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது, பேசுவதற்கு முன்னாள் தாய் தந்தையரை வணங்கியது. அடையாளத்தை உறுதிப்படுத்தியது. பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று கூறியது. தாக்குதல் அரசியல் இல்லாமல் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பேன் என்று கூறியது பாராட்டுக்குரியது.

அரசியல் எதிரி:

இன்று தனது எதிரிகளை அடையாளப்படுத்துகிறேன் என்று கூறி, அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது. ஊழலை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்திற்கு ஆபத்து என்று துணிச்சலாக பிரகடனப்படுத்தியது, மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தும் குடும்ப ஆட்சியின் உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். பாஜகவை மறைமுகமாக என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாஜக மக்களை பிளவு படுத்தவில்லை என்ற தங்கள் கொள்கைதான் பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து திட்டங்களும். அனைவருக்கும் என்ற தாரக மந்திரம்.

கொள்கை திட்டங்கள்:

நல்ல குடிநீர் கொடுப்போம் என்று கூறுகிறீர்கள் அதுதான் பிரதமரின் ஜல் சக்தி திட்டம் இல்லம் தோறும் நல்ல குடிநீர். முதியவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறீர்கள் பாரதப் பிரதமரின் 70 வயது மருத்துவ காப்பீடுத்திட்டம். பசியை போக்கும் என்கிறீர்கள் கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக இலவச தானியம் 5 கிலோ வழங்குகிறார்கள். மதச்சார்பின்மை பற்றி கூறுகிறீர்கள், சிறுபான்மையினர் 25 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். ஆளுநர்களை நீக்க வேண்டும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாநிலத்திற்கு நல்லது செய்த ஆளுநர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்காரை பாராட்டி விட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளவு இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல.

நீட் தேர்வு:

தமிழக மாணவர்கள் 14 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் 7.5 ரிசர்வேஷன் இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள். இருமொழிக் கொள்கை ஆதரிக்கிறிரோம் என்று கூறிகிறீர்கள். தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது... இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தினால் அது நல்லது தானே. பாஜகவை பற்றிய நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களை நான் உங்களுக்கு விளக்க முடியும். அதிகாரப்பகிர்வு என்ற ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கிறீர்கள். தாங்கள் மட்டுமே என்ற அதிகார ஆணவத்திற்கு பதிலடி கொடுப்பதாக இருக்கும் நீங்கள் கொள்கை எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் விளக்கங்களைச் சொன்னால் அதை ஒப்புக்கொள்ளக்கூடும். உங்கள் அரசியல் எதிரியை மக்கள் நலனுக்காக முன்னெடுத்துச் சென்றால் நல்ல அரசியல் மாற்றத்திற்கு இயக்கம் வித்திடக்கூடும்.. மக்களுக்கான சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள் நன்றி வணக்கம்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Embed widget