மேலும் அறிய

மேட்டூர் அணை: நீர் வரத்து குறைவு! மீண்டும் 120 அடியை எட்டியதா? இன்றைய நிலவரம் என்ன ?

சேலம் : இன்றைய நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது

மேட்டூர் அணை இன்றைய  நிலவரப்படி நீர் வரத்து, விநாடிக்கு 40 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணை இன்றைய  நிலவரம்

தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு பெருக்கெடுத்து வந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இதன்காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மளமள என்று உயர்ந்து கொண்டே வந்தது.

கடந்த 29ம் தேதி மாலையில் மேட்டூர் அணை தன் உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதன்முறையாக நிரம்பியது. தொடர்ந்து அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு கர்நாடக மாநிலத்தில் மழையளவு குறைய தொடங்கிய நிலையில் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

குறிப்பாக அணைக்கு வரத்து நீரை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருந்ததால் கடந்த 3ம் தேதி முதல் 120 அடிக்கும் கீழாக மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. அதாவது கடந்த 2-ந்தேதி 120 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 3-ந் தேதி காலையில் 119.91 அடியாகவும், நேற்று முன்தினம் 119.60 அடியாகவும் நீர்மட்டம் குறைந்தது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரத்து 423 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் நேற்று முன்தினம் அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 53 ஆயிரத்து 27 கனஅடியாக அதிகரித்தது. ஒரேநாளில் 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து அதிகரித்த நிலையில் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர தொடங்கியது.
நேற்று மாலை 119.93 அடியாக உயர்ந்த நிலையில் இரவு 8 மணியளவில் அணை நீர்மட்டம் 120 அடியை மீண்டும் எட்டி நிரம்பியது. இந்த ஆண்டில் அணை 2,-வது முறையாக நிரம்பி உள்ளது. அதாவது 3 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 401 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும், நீர் மின்நிலையங்கள் வழியாக 22 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 17 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு இன்றைய  நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget