சென்னையில் மிகப் பெரிய தீம் பார்க்!
சென்னையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், திருப்போரூர் அருகே, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் அமைய உள்ளது.
இந்தியாவில் கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது
டிஸ்னி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ போன்ற உலக அளவில் இருக்கும் மிக முன்னணி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்களை சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில், 510 கோடி ரூபாய் செலவில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது.
பொழுதுபோக்கு பூங்காவில் பல்வேறு புதுவிதமான, வித்தியாசமான அனுபவங்களை மக்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது.இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது. இதற்கு 80 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வொண்டர்லா செல்ல வேண்டும் என்ரால் சென்னையிலே இருக்கிறது.