மேலும் அறிய

Seeman : பைத்தியக்காரத்தனம்..! அண்ணாமலையை வெளுத்து வாங்கிய சீமான்

அண்ணாமலை நேருக்கு நேர் கேட்கிறேன்; இந்தி எதற்காக தேவை? எதற்காக இந்தி எனக்கு தேவை என்பதற்கான ஒரு காரணம் சொல்லுங்கள் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விக்கிரவாண்டில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நேமூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதாக விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விக்கிரவாண்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு :-

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதில்:- இதனை கடை பிடித்தால் தான் நிதியை ஒதுக்கி தருவோம் என்பது அது எந்த மாதிரியான மனப்போக்கு, எப்படிப்பட்ட தலைமை என்பதை பார்க்க வேண்டும். இது எப்படி ஒரு ஜனநாயகமாக இருக்கும். இதை செய்ததால் தான் தருவேன் என்பது எப்படி சரியாக இருக்கும். 
 
உங்கள் பணத்தைக் கேட்கவில்லை மாநிலங்கள் கொடுக்கின்ற வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசு நிதி. இந்திய அரசுக்கு என்று வருவாய் பிறப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா மாநிலங்கள் கொடுக்கின்ற வருவாய் பெருக்கம் தான் உங்களுக்கு நிதி வளமை அந்தந்த நிலங்களுக்கு புதுமைப் படுத்தி பிரித்து கொடுக்க வேண்டியது தான் அரசின் கடமை. அதற்கு தான் பொது அமைப்பாக அரசு என்பதை வைத்திருக்கிறோம். அதை நீங்கள் வைத்துக் கொண்டு இதை செய்தால் தான் தருவோம் என்பது கொடுங்கோன்மையாகும் இது ஏற்கத்தக்கது அல்ல.

ஏன் வலிந்து திணிக்கிறீர்கள்:

நாட்டின் இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டிற்கு நேர் எதிரானது. ஒரு தேசிய இனங்களுக்கும் உரிமை உள்ளது அதனால் மாநிலத்தில் தன்னாட்சி என்கின்ற முழக்கம் வந்தது. என் காசை எடுத்து வைத்துக் கொண்டும் இதை செய்தால் தான் தருவேன் என்பது திமிர் தனமாக உள்ளது. மும்மொழி கொள்கையில் இருக்கின்ற இந்தி மொழி ஏன்? அதை ஒரு திறந்த மனசான்றோடு இந்தியை கட்டாயமாக கற்க வேண்டும் என்கின்ற அவசியம் ஏன்?
 
இந்த நாட்டில் இருக்கிற ஏழ்மை, வறுமை, பசி பட்டினி வேலையின்மை இது எல்லாத்துக்கும் ஒரே மருந்து இந்தி கற்பதுதானா, இந்தி படித்து தான் ஆக வேண்டும் என்கின்ற தேவை ஏன், அதை ஏன் வலிந்து திணிக்கிறீர்கள், ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு தாய் மொழி உள்ளது. மொழி வழியே தான் இங்கு தேசிய இனங்கள் வளங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது, சாதி வழியோ மத வழியோ கிடையாது. பல கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் வீதியில் இருக்கிறார்கள். 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக அறிவித்தீர்கள் ஆனால் கொடுத்தீர்களா? 
 
எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு தனிப்பெரும் முதலாளியின் லாப குவியலுக்கு தரகு வேலை பார்த்துக் கொண்டு இந்தியைப்படி, இதை செய்தால் தான் காசு தருவேன் என்பது என்ன?  இதுபோன்று செய்தால் சரக்கு மற்றும் சேவை வரி நிறுத்தினார் என்ன செய்வீர்கள் ? இந்த( திமுக)அதிகாரம் அதனை செய்யாது இது கோழைகளின் கூடாரம். 
 
ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்தியை எதிர்க்காது, எதிர்க்கட்சியாக இருக்கும் ஹிந்து தெரியாது போடா என்று கூறும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது Go back மோடி என்றும் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது welcome மோடி என்று கூறும்.
 
அண்ணாமலை வெளியிட்ட வீடியோ குறித்த கேள்விக்கு பதில்:-

பைத்தியக்காரத்தனம்.. நீங்க படிச்சது, அப்படி படிச்சு இருக்கீங்க.. அவர் சொல்லுவார் அவர் நல்லா படிக்க வேண்டும் ஐபிஎஸ் படிச்சது போதாது, அதில் இருக்கின்ற கொள்கை மொழியை தெளிவாக படிக்க வேண்டும்.அவர் (அண்ணாமலை) சொல்வார் அவர் தமிழனாக இருந்து பேச வேண்டும்.. 
 
அண்ணாமலையை பார்த்து நேருக்கு நேர் கேட்கிறேன்.. இந்தி எதற்காக தேவை .. எதற்காக இந்தி எனக்கு தேவை என்பதற்கான ஒரு காரணம் சொல்லுங்கள்...  இந்தியை படித்தால் தான் தேசம் ஒற்றுமையாக இருக்கும் என்றால் என் தாய் மொழியை கொன்றுவிட்டு செய்வது இது ஒரு தேச துரோகம். அண்ணாமலை ஒரு தமிழனாக இருந்தால் இதை உணர்த்திருக்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளின் படிக்கிறார்களா... அரசு பள்ளிகளில் சுடுகாடு போல் உள்ளது... திட்டமிட்டு தமிழ் மொழியை அழித்து வருகிறார்கள். 
 
திமுக ஆட்சி குறித்த கேள்வி:-

அவரது கட்சிக்காரர்கள் தவிற வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்லு சொல்லுங்கள். இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்க்கும் மேலான போராட்டங்கள் நடக்கிறது. இது நல்லாட்சியா? இன்றைக்கும் போராட்டங்கள் நடக்கிறது.  சென்னை, பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள், அரசு ஆக்கிரமங்கள் சட்டம் பொதுமக்கள் ஆக்கிரமித்தால் அது குற்றம். நல்லாட்சி.. நல்லாட்சி சொல்கின்ற பெருமக்களே உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா ? நல்லாட்சி என்று சொல்லும் முதல்வர் ஏன் ஈரோடு தேர்தலில் நேரடியாக வந்து ஓட்டு கேட்கவில்லை... காசு கொடுத்து ஓட்டு வாங்கினீர்கள். 
 
அப்பா என்பதை அடையாளமாக மாற்ற நினைக்கிறார்; அப்பா என்பதை குறியீடாக மாற்ற நினைக்கிறார். அப்பா என்பவர் எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் ஆனால் குடிக்க வைக்க கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மனைவிக்கு யார் அப்பா ? மயிலாடுதுறை இரண்டு பிள்ளைகள் பிறந்தவர்களுக்கு யார் அப்பா ? இப்படிப்பட்ட அப்பாவை பார்க்கும் போது என்னப்பா இப்படி பண்றீங்க என்று கேட்கிறார்கள்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேங்கி நிற்கும் கழிவுநீர்! ஜெபம் செய்த மக்கள்! அதிகாரிகளுக்கு வைத்த REQUEST
ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! களத்தில் இறங்கிய POLICE
Land issue CCTV|சிறுநீர் கழித்த மர்ம நபர்கள்தட்டிக்கேட்ட காவலாளி மீது தாக்குதல்நில உரிமையாளர் புகார்
விஜய் போட்டியிடும் தொகுதி! V-ல் ஆரம்பிக்கும் 9 இடங்கள்! ஜோசியர் கொடுத்த ஐடியா
கடலை மிட்டாய் to அர்ஜூனா விருது! ரியல் பைசன் காளமாடன்! யார் இந்த மணத்தி கணேசன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Dhoni Replacement: தோனிக்கு பதில் இனி இவர்தான்.. சிஎஸ்கே-வின் புதிய விக்கெட் கீப்பர் ரெடி?
Dhoni Replacement: தோனிக்கு பதில் இனி இவர்தான்.. சிஎஸ்கே-வின் புதிய விக்கெட் கீப்பர் ரெடி?
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?
Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?
Embed widget