அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது செங்கலை எரிந்த பாஜகவினர்? அதிர்ச்சியளிக்கும் காட்சி.! பரபரப்பில் டெல்லி தேர்தல்
Attacks On Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கற்கள் உள்ளிட்டவைகளை கொண்டு பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக, ஆம் ஆத்மி வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார், பா.ஜ.க.வினரை நசுக்கிக்கொண்டு முன்னால் சென்றது என்றும், அப்போது, தனது கட்சி நபரின் ஒருவரின் கால் உடைந்துவிட்டது என்றும், கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜகவைச் சேர்ந்த வர்மா தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலானது வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பிரதான கட்சிகளான ஆம் ஆத்மி , பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிரமாக பரபரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன. இன்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, அவர் சென்ற கார் மீது, சிலர் கற்களை கொண்டு எரிந்தனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “ பாஜக தலைவர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் செங்கல் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தினர். தோல்வி பயத்தில் பீதியடைந்த பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலைத் தாக்க, அதன் குண்டர்களை பயன்படுத்தியுள்ளது.
உங்கள் கோழைத்தனமான தாக்குதலுக்கு , கெஜ்ரிவால் பயப்படக்கூடியவர் இல்லை; டெல்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று ஆம் ஆத்மி தனது எக்ஸ் பதிவில், வீடியோவை பதிவிட்டு கூறியுள்ளது.
கல் எறியும் வீடியோ:
”
हार के डर से बौखलाई BJP, अपने गुंडों से करवाया अरविंद केजरीवाल जी पर हमला‼️
— AAP (@AamAadmiParty) January 18, 2025
BJP प्रत्याशी प्रवेश वर्मा के गुंडों ने चुनाव प्रचार करते वक्त अरविंद केजरीवाल जी पर ईंट-पत्थर से हमला कर उन्हें चोट पहुंचाने की कोशिश की ताकि वो प्रचार ना कर सकें।
बीजेपी वालों, तुम्हारे इस कायराना… pic.twitter.com/QcanvqX8fB
பர்வேஷ் வர்மா , அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து நியு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
”பாஜகவினர் கால் உடைந்துவிட்டது”
இச்சம்பவம் குறித்து பாஜக தலைவர் பர்வேஷ் வர்மா பேசியதாவது , ” ஆம் ஆத்மி குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார், பா.ஜ.க.வினரை நசுக்கிக்கொண்டு முன்னால் சென்றது , அப்போது, தனது கட்சி நபரின் ஒருவரின் கால் உடைந்துவிட்டது. தற்போது, அவரை நலம் விசாரிக்கு மருத்துவமனைக்குச் செல்கிறேன். இது மிகவும் வெட்கக்கேடானது. " என வர்மா பேசினார்.
#WATCH Delhi: On AAP alleging attack on the convoy of Arvind Kejriwal, BJP candidate from New Delhi assembly seat, Parvesh Verma says, "The car of Arvind Kejriwal has gone ahead by crushing the worker of the BJP. The leg of the worker (BJP) has broken and I am going to the Lady… pic.twitter.com/63CAwqOVPK
— ANI (@ANI) January 18, 2025
டெல்லி தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் , இதுபோன்ற சம்பவங்கள் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

