Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates 2025: வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு தொடங்கி, முடிக்கப்பட உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டம்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்படி, வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
புதிய அட்டவணை என்ன?
முன்கூட்டியே தொடங்கும் கோடை விடுமுறை
தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதி முதல், கோடை விடுமுறை தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதியே தேர்வுகள் முடிக்கப்பட்டு 18ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. எனினும் முன்கூட்டியே திட்டமிட்டவாறு, 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.

