Empuraan : படத்திற்கு RSS கடும் எதிர்ப்பு....17 காட்சிகளை தணிக்கை செய்ய முடிவு?
எம்புரான் படத்தின் காட்சிகளுக்கு பாஜக , ஆர்.எஸ்.எஸ் தரப்பினரால் கடும் அழுத்தம் தரப்படுவதால் படத்தின் காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

எம்புரான்
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது . நேற்று மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. பிருத்விராஜ் , மோகன்லால் , டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் , சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
சர்ச்சைக்குரிய காட்சிகள்
பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் இந்திய அரசியல் நிலப்பரப்பை மையக்கதையாக கொண்டுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் , பாஜக , மார்க்ஸிய காட்சிகளை குறிப்பிட்டு விமர்சிக்கும் விதமாக இப்படத்தில் நிறைய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் 2004 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்து முஸ்லிம் கலவரமும் இப்படத்தின் மையக் கதையாக இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கர்ப்பினி இஸ்லாமிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
17 காட்சிகள் நீக்க முடிவு
இந்துக்களை கொடூரமானவர்களாக எமுரான் படம் சித்தரிப்பதாக இப்படத்திற்கு நிறைய விமர்சனங்களை இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்து வருகிறார்கள். பாஜக அரசியல் பிரமுகர்களும் படத்திற்கு எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் எம்புரான் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை படக்குழு நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பினராய் விஜயன் பாராட்டு
எம்புரான் படத்தை பார்த்த கேரள முதலமைச்சர் அப்படத்திற்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
"மலையாளத் திரைப்பட உலகத்தை ஒரு புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் எம்புரான் படத்தை எதிர்ப்புகளின் மத்தியில் பார்த்தோம். படம் வெளியாகியதிலிருந்து, நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை இலக்காகக் கொண்ட துயரமான வெறுப்பு பிரச்சாரங்கள் பரவலாக எழுந்துள்ளன. குறிப்பாக, இந்த திரைப்படம் ஒரு நாட்டின் வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை பதிவு செய்யும் போது, அதன் பின்னணியில் செயல்பட்ட சக்திகளை வெளிச்சம் போட்டு காட்டியது சில குழுக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களிடமிருந்து நேரடி மிரட்டல்களும் எதிர்ப்புகளும் வெளிப்படுகின்றன. இது صرف திரைப்படக்கலைக்கு எதிரான தாக்குதலாக அல்ல, கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக விருத்தியையும் குறை கூறும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்கவும், மக்கள் அவற்றைப் பார்ப்பதும் விமர்சிப்பதும் ஜனநாயக உரிமையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
இந்த முறைகேடான அழுத்தங்களுக்கு எதிராக, ஜனநாயகத்தையும் மதச்சார்பற்ற அடிப்படைகளைப் பாதுகாக்கவும், கலை மற்றும் சுதந்திரத்தின் மீது வரியும் கட்டுப்பாடுகளை எதிர்க்கவும், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்ட குரலுடன் முன்னே வர வேண்டும்.

