Erode East Election: 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு: திமுக -நாதக பிளானுக்கு கொட்டு வைத்த தேர்தல் ஆணையம்
Erode East By Election Nomination: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்றுடன் நிறைவுபெற்ற நிலையில், 3 பேரின் வேட்புமனுவானது நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தலானது வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், 3 பேரின் வேட்புமனுக்களானது நிராகரிக்கப்பட்டுள்ளது; மேலும் திமுக , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 55 பேரின் வேட்புமனுக்களானது ஏற்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேதலாந்து வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்றுடன் வேட்புமனு தாக்கலானது நிறைவுபெற்ற நிலையில், இன்று, அந்த வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் 55 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, 3 நபர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நாளை வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
ஏன் வேட்புமனு நிராகரிப்பு:
இந்நிலையில் தேர்தல் அதிகாரி தெரிவித்ததாவது, உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாற்று வேட்பாளர்கள் (Substitute) 2 பேரின் வேட்புமனுக்களும், ஒரு சுயேட்சை நபரின் வேட்புமனுவும் என மொத்தம் 3 நபர்களின் வேட்புமனுக்களானது நிராகரிக்கப்பட்டன; திமுக, நாதக உள்ளிட்ட 55 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வழக்கமாக பிரதான கட்சிகள், தங்களது வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் , அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , தங்களது கட்சியைச் சேர்ந்த சில நபரையும் கூடுதலாக ( மாற்று வேட்பாளராக ) வேட்புமனு தாக்கல் செய்ய வைப்பது வழக்கம். இந்நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் திமுக , நாதக மாற்று வேட்பாளரின் வேட்புமனுதாக்கலானது தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என அதிமுக, தேமுதிக, பாஜக போன்ற பிரதான கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டு அரசியலில் திமுக -அதிமுக என்ற இருமுனைப்போட்டியே நிலவும். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த முறை திமுக - நாதக என்ற புதிய இருமுனைப்போட்டி நிலவுகிறது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது திமுகவிற்கு மிகவும் சாதகமான சூழலாகவே கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தது, ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வெற்றியை எளிதாக பரிசளிப்பது போல் அமைந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

