ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்
பெருமாப்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி படுகாயமடைந்த நபரை படம் பிடிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் திருவிழா இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைப்பெற்றது.
இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அதனை வேடிக்கை பார்க்க வாலிபரை மாடு முட்டியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அதனை செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் பிரவீன் குமாரை அப்பகுதி சார்ந்த மதன் என்பவர் தகாத முறையில் பேசி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பிரவீன் குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுவரை போலீசார் ஸ்டேட்மெண்ட் வாங்க வராததாலும் மேலும் அடித்த நபர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தாலும் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி பத்திரிகையாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல சமாதானம் பேசினார். இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு காணப்பட்டது.





















