Amit Shah About ADMK alliance | அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்று அமித்ஷா கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்ட நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று சந்தித்தது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று விடாப்பிடியாக இருந்த இபிஎஸ் தற்போது இறங்கி வந்துள்ளார்.
டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் என்பதை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலையே தொடர வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர். அதேபோல் ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது என்ற கண்டிஷனுடன்தான் இபிஎஸ் கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. பாஜக தலைமையிடம் இருந்தும் அதற்கு க்ரீன் சிக்னலே வந்துள்ளது. இருந்தாலும் ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தொகுதி பங்கீடு, ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றில் சுமூகமாக முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வி வந்துள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷாவுடன் அதிமுகவுடன் கேள்வி எழுப்பட்டது. இதுக்குறித்து அமித்ஷா தெரிவித்தாவது தென்னிந்தியாவில் மிகவும் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, தற்போது திமுக அரசின் கொள்கையால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது.தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் தேசிய கல்விக்கொள்கையையும்,மருத்துவம், பொறியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால், அவர்கள் அதை தொடங்கவும் இல்லை . தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது. .அதற்கு, 0.0001 சதவீதம் கூட அநீதி நடக்க வாய்ப்பு இல்லை . அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது, 'சரியான நேரம் வரும்போது, அதை தெரியபடுத்துவோம்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.





















