1 Year of Stalin Govt: திமுக மீது குடும்ப அரசியல் குற்றச்சாட்டு உள்ளதா? குவிந்த பதில்கள் இவைதான்!
தி.மு.க. குடும்ப அரசியல் விமர்சனம் செய்கிறது என்ற விமர்சனம் அரசியல் விமர்சனமா? இல்லை நியாயமனதா? என்று ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுக வேட்பாளராக மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கி வெற்றி பெற்றார்.
தி.மு.க.வின் மீது குடும்ப அரசியல் என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், இந்த விமர்சனம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்று அரசியல் கட்சியினரிடம் ஏபிபி சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.
முதல்வரின் ஆட்சியில் திமுக எதிர்க்கொள்ளும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டு குறித்து?
அரசியல் விமர்சனம் :
தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டு ஒரு அரசியல் விமர்சனம் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 60.2 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 40.4 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 50 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் 72.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 61.5 சதவீதம் பேரும், மற்றவர்கள் 44.4 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 54.1 சதவீதம் பேர் தி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறது என்பது அரசியல் விமர்சனம் என்று கூறியுள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
நியாயமான விமர்சனம் :
#SurveyResults | திமுக அரசின் ஓராண்டு ஆட்சி... திமுக எதிர்க்கொள்ளும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டு குறித்து?
— ABP Nadu (@abpnadu) May 27, 2022
வீடியோவை காண - https://t.co/wFSDef5mzF#ABPNadusurvey #CVoter #ABPNadu #DMK #MKStalin #1Yearofmkstalin #Abpnaducvotersopinionpoll
#TNGovt @mkstalin @arivalayam pic.twitter.com/9vJPbWg9MK
தி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் நியாயமானது என்று தி.மு.க. கூட்டணியினர் 39.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 59.6 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 50 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தியைச் சார்ந்தவர்கள் 27.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் 38.5 சதவீதம் பேரும், மற்றவர்கள் 55.6 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். தி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் நியாயமானது என்று 45.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்