மேலும் அறிய

அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,

கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்காகவும் - மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், என்றென்றும் வலுவான குரலை எழுப்பி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலில் மிக முக்கியமான பேரியக்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு முறை நாடாளுமன்றக் கூட்டத்தின் போதும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலான தி.மு.கழகத்தின் குரல் - கழகத் தலைவர் அவர்களின் ஜனநாயக உரிமை முழக்கம் - கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலாக எதிரொலிக்கிறது. அந்தக் குரலைத்தான் நாடும் - நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின்போது எதிர்பார்க்கிறார்கள். அதனை வழிமொழிகிறார்கள்.

தமிழ்நாட்டின் பிரச்சினைகளை மட்டுமின்றி, நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஜனநாயகப் பேரியக்கமாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடையே திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.5.2025 அன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திய “காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம்”, “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு, அனைவருக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுதல்”, “மும்மொழிக் கொள்கையைத் திணித்து, பின்னர் மகாராஷ்டிரா மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பின்வாங்கினாலும், அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் S.S.A. நிதியை அளித்து, தமிழ்நாட்டுக்கு   S.S.A. நிதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மறுப்பது”, “ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு”, “15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி”, “ஒன்றிய அரசும் - மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி” ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பதுடன், தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மவுனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய இரயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பதுடன், ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக்கழிப்பது, வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஜனநாயகத்தின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் நோக்கில் தன்னாட்சிப் பெற்ற தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது,  திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது,  ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் இரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிடவும், தமிழ்நாட்டின் நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும் வருகின்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் உரக்க குரல் எழுப்பி, கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழர்களுக்கு எதிரான பண்பாட்டு ஊடுருவலை நிகழ்த்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் உறுதியாகவும் ஒருங்கிணைந்தும் வெளிப்படுத்துவார்கள் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தலைப்பு செய்திகள்

3ம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து.. துணைவேந்தரின் மாஸ்டர் பிளானா? .. குவியும் குற்றச்சாட்டுகள்!
3ம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து.. துணைவேந்தரின் மாஸ்டர் பிளானா? .. குவியும் குற்றச்சாட்டுகள்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget