Watch Video: சிவகங்கையில் செய்தியாளரை தாக்க முயன்ற அமைச்சர் பெரிய கருப்பன் - வீடியோவால் பரபரப்பு
இளைஞர்களின் திறன் விழாவில் அமைச்சருக்காக 3 மணி நேரத்துக்கு மேலாக இளைஞர்கள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட செய்தியாளரை அமைச்சர் பெரியகருப்பன் மிரட்டும் வீடியோ வைரலாக பரவுகிறது.

சிவகங்கை மாவட்டம், ராஜா துரைசிங்கம் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்து, வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான இளைஞர் திறன் திருவிழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காலை 10 மணிக்கு துவக்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக படித்த இளைஞர்கள் விழா அரங்குக்குள் விரைவாகவே அழைத்து வந்து அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் @OfficeOfKRP -க்காக மாணவர்கள் 3 மணி நேரமாக காத்திருந்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதனை அறித்த அமைச்சர் செய்தியாளரை தாக்க முற்படும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.@hari_rs_jo |@vetridhaasan pic.twitter.com/zOOCG5fvJB
— Arunchinna (@iamarunchinna) July 19, 2022


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

