மேலும் அறிய

Parthiban : "ஏ" இல்லாமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன் - மதுரை மீனாட்சி தரிசனத்திற்கு பின் நடிகர் பார்த்திபன் பேட்டி

இரவின் நிழல் ரஜினி சார் படம் பார்த்து 'U made on history’ என பாராட்டி உள்ளார்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். 

இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருந்தார். 

Iravin Nizhal Review in Tamil Parthiban Varalakshmi Sarathkumar Starred worlds first non-linear single-shot film Review
இந்நிலையில் இரவின் நிழல் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,” இரவின் நிழல் படத்திற்கு கொடுத்த அமோகமான ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி. எனக்கும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. முதலில் என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை மீறி மிகப்பெரிய சக்தி உள்ளது. அந்த தேடல் இருந்து கொண்டே உள்ளது. அதை தேடுவதை மிகப்பெரிய வேலையாக வைத்துள்ளேன். நான் 11 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்றுள்ளேன். திருப்பதிக்கு சென்றுள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சியை பார்க்க வருவேன். மீனாட்சியம்மனை பார்த்துவிட்டு கோவிலிலில் உட்கார்ந்து காதல் கவிதை எழுதுவேன். மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்துவிட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன். இரவின் நிழல் என்னுடைய முயற்சி அனைத்தும் போட்டு எடுத்த படம். இரவின் நிழல் படம் வெற்றியடைந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் படம் மாபெரும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்றால், கைவிட்டு போன ஒன்று என்ன செய்வதென்று தெரியாது. அதற்கு நம் மனதை உள்முகமாக நகர்த்தி சின்ன பிரார்த்தனை செய்ய வேண்டி உள்ளது. விருதுகளை குவிக்க உள்ள படம் இது. இந்த படத்தின் வருமானம் திரைப்பட உலகத்தை திருப்பி போட்டு விடும். மிக மிக வித்தியாசமான படங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்ற ஆச்சரியத்தை கொடுத்த படம் இரவின் நிழல். ரஜினி சார் படம் பார்த்து 'U made on history’ என பாராட்டி உள்ளார். நாளை ரஜினி சாரையும், இன்று கமல் சாரையும் பார்க்க உள்ளேன். சினிமவில் மிகப்பெரிய உயரத்தை எட்டிய கமல் ரஜினி போன்றோரின் வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம்.
Iravin Nizhal Review in Tamil Parthiban Varalakshmi Sarathkumar Starred worlds first non-linear single-shot film release
அவர்களின் வாழ்த்துகளை பாசி மணி ஊசி மணி போல கோர்த்து கழுத்தில் போடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. பெட்டி நிறைய பணம் இருந்நால் இங்கேயே பூஜை போட்டு விடுவேன். பெட்டி நிறைய பணம் இருந்தவர்களை கண்டுபிடித்து காலி செய்து படம் எடுக்கலாம் என உள்ளேன். அப்படியொரு இளிச்சவாயன் கிடைக்கிவில்லை என்றால் நானே பிரடியூசர் ஆகிவிடுவேன். ஏனென்றால் என்னை விட சிறந்த இளிச்சவாயன் இல்லை. தற்போதைக்கு குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் வகையில் மெதுவா ஜாலியா இருக்கும் படங்களை எடுக்க உள்ளேன். நிறைய கதைகள் உள்ளன. எதார்த்தமா சொல்ல வேண்டிய விஷயத்தை அது அடல்ஸ் ஒன்லி என்கிற சூழ்நிலையாக மாறி விட்டது. சிங்கிள் சாட் படம் என்பதால் எங்கேயும் வெட்டாமல் எடிட் செய்யாமல் ஒரு சில இடங்களில் மீயுட் செய்தோம். அது தான் எங்களுக்கு தெரிந்த விஷயம் தானே எதுக்கு மியூட் செய்தீர்கள் என பெண்கள் கேட்டார்கள். அடுத்தமுறை "ஏ"இல்லாமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன். மதுரையை மையமாக வைத்து படக்க புரொடியூசர் தொழிலதிபர் யாராவது கிடைப்பார்களா என பார்க்கிறேன். சமுத்திரக்கனி சசிக்குமார் மதுரையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்” என்றார்.
 

 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget