ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை - மதுரையில் நடந்த சோகம்
கணவன் - மனைவியிடையே இருந்த சண்டையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.
குடிப்பழக்கம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமார். பட்டதாரியான இவர் கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், மதுரை பேரையூரை சேர்ந்த வீர செல்வி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் வீர செல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்த நிலையில் மதுரை மாநகர் அனுப்பானடியை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வாடகை வீடுகளில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி பாபுநகர் 4 ஆவது தெரு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் செந்தில் குமார் சில வருடங்களாக வேலைக்கு செல்லமால் வீட்டிலயே இருந்து வந்துள்ளார். அவ்வப்போது வீர செல்வியின் பணத்தை எடுத்துசென்று மது அருந்துவது, வெளியில் தவறான செயல்களில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் திடீரென சிலைமான் பகுதியில் வைகையாற்று கரையோரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்கில்) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் செந்தில் குமாரின் மனைவியிடம் கூறியுள்ளனர்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)