மேலும் அறிய

காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?

Tamil Nadu Engineering Ranking: இன்ஜினியரிங் தர வரிசையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி சகஸ்ரா முதலிடம் பிடித்த அசைத்துள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி, இன்ஜினியரிங் தர வரிசையில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் அதிக அளவு மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர். அதேபோன்று அண்ணா பல்கலைக்கழகத்தில், கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த கல்லூரிகளில் நடப்பாண்டு இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கடந்த ஆண்டைவிட தற்போது, 720 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 2,42,951 மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

கலந்தாய்வு எப்போது ?

இந்தநிலையில், இன்று பி.இ., (BE) பி.டெக்.,(B.Tech) பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன். இந்த ஆண்டு பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 145 மாணவர்கள் பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து 7.5 இடஒதுக்கீட்டின் கீழ் 54 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த மாணவர்களுக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 7.7.2025 முதல் 11.7.2025 வரை நடைபெறும்‌. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 14.7.2025 - 19.8.2025 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி அசத்தல்

கலந்தாய்விற்கான டாப் 10 இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தமிழ்நாட்டளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஊரக உள்ளாட்சி துறையில் அரசு ஊழியராக பணிபுரியும் ஜெயவேல் மற்றும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அருணா தம்பதியின் மகள் சகஸ்ரா இவர் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வில், தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, இயற்பியல்-100, கணினி அறிவியல்-100, வேதியல்-100 மொத்தம் 598 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தரவரசியில் முதலிடம் பிடித்திருப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள எந்தக் கல்லூரியிலும் எந்த துறையையும் மாணவியால் தேர்ந்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவில் இன்ஜினியரிங் தர வரிசையில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து மாணவிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பு

இதுகுறித்து மாணவி கூறுகையில் சகஸ்ரா, இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன், கணினி அறிவியல் பாடம் எடுத்ததாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர உள்ளதாகவும் தெரிவித்தார். இன்ஜினியரிங் தர வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியை அழைப்பதாகும் கூறியுள்ளார். மேலும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering - ECE) துறை எடுத்துப் படிக்க உள்ளதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
Embed widget