வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை விசாராணை வளையத்திற்குள் கொண்டு வர போலீஸ் தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில் மேலும் பல்வேரு நபர்களுக்கு போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதனிடையே, கழுகு என்ற படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தீவிர் தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார் அவரை கைது செய்தனார். இது தொடர்பாக பேசிய கிருண்ஷா, “ நான் போதை பொருள் பயன்படுத்தியதே இல்லை. ஸ்ரீகாந்துடன் நட்புடன் தான் பழகினேன். எனக்கு போதை பொருள் விற்பனை செய்யும் யாரையும் தெரியாது”என்று கூறினார்.
இந்த நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களும் அடிபடுகிறது. அவர்களது விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த போதைப்பொருளை பயபடுத்தினால் 45 நாட்கள் வரை உடலில் இருக்கும் என்பதால் இது தொடர்பாக விசாரணை வளையத்தில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை 45 நாட்களுக்குள் விசாரிக்க வேண்டும் என்று அது தொடர்பான நடவடிக்கைகளை காவல் துறையினர் வேகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நடிகர், நடிகைகள் இப்போதே தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரமே கலங்கிப்போய் உள்ளதாக சொல்கின்றனர்.




















