மேலும் அறிய

நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது என்றும், திமுக அரசு தன் பங்கை ஆற்றத் தவறவிட்டது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய அளவிலான நிதியை ஒதுக்குவதில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு உடன்பட மறுப்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்க வருவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசின் திட்டங்கள்:

இந்த நிலையில், தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அமித்ஷாவிடம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித்ஷா, மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. செயல்படுத்தப்படும் திட்டங்களும் குறைபாடுகளுடன் செயல்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தவறாக திமுக அரசு சித்தரிக்கிறது. 

நிதி தவறாக பயன்பாடு:

பல திட்டங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் அவர்கள் பெயரளவிற்கு செயல்படுத்திய திட்டங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை ஐசிடிஎஸ், நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.  பிரதமரின் மாத்ரு வந்தன யோஜனா திட்டத்தில் முந்தைய நிதி ஒதுக்கீட்டை முறையாக செலவு செய்யவில்லை. ஆனால், அதற்குள் அடுத்த தவணைக்கான தொகையை விடுவிக்குமாறு திமுக அரசு கேட்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் ஏாளமான ஊழல் புகார்கள் உள்ளது. 

வீடுதோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திலும் போலி இணைப்புகள் புகார்கள் குவிந்துள்ளது. மேலும், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்திலும் தகுதியற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு, உண்மையான பயனாளிகளை ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

மூன்றரை மடங்கு அதிகம்:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை தரவில்லை என திமுக தரப்பு கூப்பாடு போடுகிறது. 2014ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மொத்தம் 1.53 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அந்த ஆட்சியில் வழங்கப்பட்டதை விட இது மூன்றரை மடங்கு அதிகம் ஆகும். 

உட்கட்டமைப்பிற்கு ரூபாய் 1.43 லட்சம் கோடி, சாலைகளுக்கு ரூபாய் 63 ஆயிரம் கோடி, ரயில்வே துறைக்கு ரூபாய் 77 ஆயிரம் கோடி, 11 மருத்துவ கல்லூரிகளுக்கு 2 ஆயிரம் கோடி, வீடுதோறும் குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 1.11 லட்சம் கோடி என ஏராளமாக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் செய்ததில் எங்களுக்கு முழு திருப்தி உள்ளது. 

சட்டம் ஒழுங்கு மோசம்:

திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு மோசமாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய முதலீடுகள் வராமல் உள்ளது. திமுக அரசு தன் பங்கை ஆற்றத் தவறிவிட்டது. 

இவ்வாறு அவர் கூறினார். 

சட்டமன்ற தேர்தல்:

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வலுவான கூட்டணியை அமைக்கும் நிலையில், திமுக-வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மேலும் சில கட்சியினரை கூட்டணியில் இணைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சூழலில், அமித்ஷா தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக-வை சரமாரியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget