Madurai: மருத்துவ கழிவை குப்பையில் கொட்டிய மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகளை கலந்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி. மருத்துவ கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை.
மதுரையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் கொட்டப்பட்டு வருவதால் சாலைகளில் மருத்துவ கழிவுகள் சிதறி அதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குப்பைகளை அகற்றக் கூடிய தூய்மை பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள்வந்தன.
மதுரையில் மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி. மருத்துவ கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை.
— arunchinna (@arunreporter92) April 27, 2023
| @city_madurai | #Madurai | #Hospitals | pic.twitter.com/EIcQNJFSBq
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்