Srividya Untold Story: கமலை காதலித்தது உண்மை; மூன்று முறை அபார்ஷன் செய்தார் ஸ்ரீவித்யா! அண்ணியே கூறிய பகீர் தகவல்!
நடிகை ஸ்ரீவித்யா பற்றி, அவருடைய சொந்த அண்ணியே சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீவித்யா. இன்று முன்னணி நடிகர்கள் பலருக்கு அம்மா கதாபாத்திரம் என்றால் சரண்யா பொன்வண்ணன் பொருத்தமாக இருப்பார் என சொல்லுவது போல், 90ஸ் காலகட்டங்களில் முன்னணி ஹீரோஸ் மற்றும் ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வைக்க பல இயக்குனர்களில் சாய்ஸாகவும் இருந்தவர் ஸ்ரீவித்யா தான்.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஸ்ரீவித்யா... கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் தன்னுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பட்ட வேதனைகள் கொஞ்சம் நெஞ்சமல்ல.

ஸ்ரீவித்யா முன்னணி நடிகையாக இருக்கும் போது, உலக நாயகன் கமல்ஹாசனை காதலித்த நிலையில் பின்னர் எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்தனர். இதற்கு காரணம் ஸ்ரீவித்யாவின் அம்மா என்றே கூறப்பட்டது. ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசன் இருவருமே முன்னணி நடிகர்களாக வளர்ந்து வரும் நிலையில் திருமணம் செய்து கொண்டால் அது அவர்களுடைய கேரியரை பாதிக்கும் என எண்ணிய ஸ்ரீவித்யாவின் அம்மா, இருவரும் சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு ஸ்ரீவித்யாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், கமலஹாசன் அவருடைய முடிவு காரணமாக ஸ்ரீவித்யா மீதான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்பட்டது.
ஸ்ரீவித்யாவை பிரிந்த கமல் ஒரே வருடத்தில் வாணி கணபதியை திருமணம் செய்த நிலையில், தன்னுடைய காதல் தோல்வியால் துவண்டார் ஸ்ரீவித்யா. சில வருடங்களுக்குப் பின்னர், ஜார்ஜ் என்கிற சினிமா பிரபாகரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தான் ஸ்ரீவித்யாவின் அண்ணி, கடந்த ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் ஸ்ரீவித்யாவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கமல்ஹாசனும் - ஸ்ரீவித்யாவும் காதலித்தது உண்மைதான். ஸ்ரீவித்யா பிசியாக நடித்து வரும் போது இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. அது ஸ்ரீவித்யாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தாலும், அதை தன்னுடைய மனதுக்குள் புதைத்துக் கொண்டு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கினார்.
சில வருடங்கள் கழித்து, சினிமா பிரமுகரான ஜார்ஜை ஸ்ரீவித்யா சந்திக்க நேர்ந்தது. அவருடைய பழக்க வழக்கங்கள் பிடித்துப் போக அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜார்ஜிக்காக ஸ்ரீவித்யா கிறிஸ்துவராக மாறி ஞானஸ்தானம் பெற்று அவருடைய குடும்ப வழக்கங்களை பின்பற்றவும் தொடங்கினார்.
ஸ்ரீவித்யாவுக்கு திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் விருப்பம் இல்லை என்றாலும், ஜார்ஜ் அவரை கட்டாயப்படுத்தி நடிக்கவைத்தார். ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பதைப்போல் உணர்ந்ததால், இதுவே அவருக்கு நாள்தோறும் ஒரு நரகமாக மாறியது. ஸ்ரீவித்யா திருமணத்திற்கு பின் மூன்று முறை கரு தரித்தார். குழந்தை பெற்றுக்கொண்டால் ஸ்ரீவித்யாவால் நடிக்க முடியாது என்று அதை கட்டாயப்படுத்தி ஜார்ஜ் கலைக்கவும் செய்தார். ஒவ்வொரு முறை கருக்கலைப்பு செய்யும்போது ஸ்ரீவித்யா அழுது துடிப்பார் என அவருடைய அண்ணி தீராத வேதனையோடு இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஜார்ஜ் தன்னை பணம் சம்பாதிக்கும் ஒரு மிஷின் போல் நடத்தி வருவதை அறிந்து, அவர் மீதான காதல் மறுத்து போய் விவாகரத்து பெறும் முடிவை எடுத்தார். அதன்படி 1980ல் கணவர் ஜார்ஜிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்று பிரித்தார் என்றும் கூறியுள்ளார். புற்றுநோய் காரணமாக உயிரிழந்த ஸ்ரீவித்யா தன்னுடைய மறைவுக்கு பின்னர், தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் சொந்த விருப்பத்தின் பெயரில் ஆதரவற்றோர்களுக்கும், ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கவும் கொடுத்தார். நலிந்த சினிமா கலைஞர்களுக்கு நிதி உதவிக்காக கொடுக்க வேண்டும் என தன்னுடைய உயிலில் எழுதி வைத்தார். அதே போல் பல வருடமாக தன்னுடைய வீட்டில் பணியாற்றியவர்களுக்கும், ரூ 1 லட்சம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை ஸ்ரீவித்யாவின் அண்ணி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.





















