Top Cooku Dupe Cooku Contestants: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'டாப் குக்கு டூப் குக்கு' போட்டியாளர்கள் விவரம்! ஃபுல் லிஸ்ட் இதோ..
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான 'டாப் குக்கு டூப் குக்கு' சீசன் 2 விரைவில் துவங்க உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

ஒரு ரியாலிட்டி ஷோ மக்களிடம் வரவேற்பை பெற்றால் அதே போன்ற நிகழ்ச்சியை, ரீ கிரியேட் செய்து ஒரு சில மாற்றங்களுடன் ஒளிபரப்புவதை தொலைக்காட்சி நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக சில டான்ஸ் நிகழ்ச்சிகள், மற்றும் இசை நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சி.
குக் வித் கோமாளி:
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ஒரு சமையல் நிகழ்ச்சியை போலவே சன் டிவியிலும் துவங்கப்பட்டது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'. சமையல் நிகழ்ச்சியை கூட சுவாரஸ்யமாக மாற்றமுடியும் என்பதை ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சியாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில், நடுவர்களாக செஃப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்தனர்.

வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்த பின்னர், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் ஆகியோர்... ஒருவர் பின் ஒருவர், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். செஃப் தாமு முதலில் வெளியேறுவதாக அறிவித்தாலும் பின்னர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், தொடர்வதை உறுதி செய்தார். இவருடன், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் சீசன் 5 நிகழ்ச்சியில் கைகோர்த்த நிலையில், கடந்த மாதம் தான் குக் வித் கோமாளி சீசன் 6 துவங்கியது
டாப் குக்கு டூப் குக்கு:
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது... அதற்கு போட்டியாக 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், இதில் வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொண்டார். விஜய் டிவியில் இருந்து வெளியேறிய இயக்குனர் - தயாரிப்பாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் பணியாற்றி வந்தனர். முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இதன் இரண்டாவது சீசன் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. எனவே டாப் குக்கு டூப் குக்குக்கு முடிவடைந்து விட்டதா? என நெட்டிசன்கள் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் கடந்த வாரம் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் 2 -ஆவது சீசன் துவங்க உள்ளது உறுதியான நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
போட்டியாளர்கள் பட்டியல்:
நடிகர், எழுத்தாளர் - வேலா ராமமூர்த்தி, எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகை - பார்வதி, பிரபல பாடகர் - உன்னிகிருஷ்ணன், குணசித்திர நடிகர் - எம் எஸ் பாஸ்கர், மருமகள் சீரியல் நடிகை - கேப்ரியல்லா, பிரபல நடிகை - இனியா, பிஜிபோஸ் பிரபலமும், நடிகையுமான சாக்ஷி அகர்வால், சூப்பர் சிங்கர் பிரபலம் - சாம் விஷால், சீரியல் நடிகர் - நந்தன், ஆகியோரின் பெயர் வெளியாகி உள்ளது. அதே நேரம் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















