Vaniyambadi Crime | உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு CCTV காட்சிகள்
வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டில் நுழைந்து வீட்டு உரிமையாளரை கட்டி வைத்து கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் தோல் தொழிற்சாலை தொழிலதிபரான, தனது மனைவி சபிதா குல்சுமுடன் வீட்டில் வசித்து வரும் நிலையில்,
இவரது வீட்டில் பணியாற்றும் ஊழியர் சக்திவேல் என்பவர் கடைக்கு சென்று, பின்னர் வீடு திரும்பிய போது, சக்திவேலை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் சக்திவேல் வீட்டில் நுழைந்த போது, அவரை தாக்கி டேப் மூலம் சக்திவேலின் வாய், கை,கால்களை கட்டிபோட்டு, வீட்டினுள் நுழைந்து இம்தியாஸை கட்டி வைத்து, அவரது மனைவி சபிதா குல்சுமை வீட்டில் இருந்த பீரோவை திறக்க கூறியுள்ளனர், அதனை தொடர்ந்து கொள்ளையார்கள் பீரோவில் நகை பணங்களை தேடிக்கொண்டிருந்த போது, சபிதா குல்சம் சுதாரித்துக்கொண்டு, வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையில் கூச்சலிட்டுள்ளார், உடனடியாக அக்கம் பக்கத்தினர் இம்தியாஸ் வீட்டிற்கு வரவே 4 பேர் வீட்டிலிருந்த 2 விலையுயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்துக்கொண்டு, தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்கள் மற்றும், சிசிடிவி கேமிராக்களை மறைக்க எடுத்து வந்த ஸ்பீரே மற்றும் கையுறைகளை அங்கேயே விட்டு தப்பியோடிள்ளனர், உடனடியாக அக்கம்பக்கத்தினர் டேப் மூலம் கட்டப்பட்ட சக்திவேல் மற்றும் இம்தியாஸை மீட்டு, இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் இம்தியாஸ் வீட்டில் ஆய்வு மேற்க்கொண்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் பட்டபகலில் தோல் தொழிற்சாலை தொழிலதிபரின் வீட்டினுள் புகுந்து, ஊழியரை கட்டி வைத்து, 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..




















