Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: லண்டனில் செட்டில் ஆகலாம் என்ற கனவுடன் பயணித்த 3 குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பம், அகமதாபாத் விமான விபத்தில் மொத்தமாக உடல் கருகி உயிரிழந்துள்ளது.

Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வில் ஈடுபட்டார்.
241 பேர் பலியான சோகம்:
அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 230 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் என மொத்தம் 241 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த நாட்டையே இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏர் இந்தியாவின் AI171 விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
யாரையும் காப்பாற்ற முடியாது ஏன்?
சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த பிறகு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “விமானம் கிட்டத்தட்ட 125,000 லிட்டர் எரிபொருளை சுமந்து சென்றது. கீழே விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட விபத்தி, மொத்த விமானமும் பற்றி எரிய அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போனது. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ பரிசோதனைகளுக்குப் பிறகு உடல்கள் உரிய குடும்ப நபர்களிடம் ஒப்படைக்கப்படும்” என அமித் ஷா விளக்கமளித்தார்.
True and sad
— Harman Singh Kapoor (@kingkapoor72) June 12, 2025
A dream perished
Pratik Joshi, a software professional, had lived in London for six years, dreaming of bringing his wife and three children from India. After years of waiting for clearances, his dream was nearing reality. Two days ago, his wife, Dr. Komi Vyas, a… pic.twitter.com/ncjspH0sZw
3 குழந்தைகளுடன் கருகிய டாக்டர் தம்பதி:
விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபருக்கும் ஒரு கதையும் அன்பு மிகுந்த குடும்பமும் உள்ளது. ஆனால், லண்டனில் செட்டில் ஆகலாம் என தங்களது 3 குழந்தைகளுடன் பயணித்த மருத்துவர் தம்பதி, குடும்பமாக எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கடைசியாக எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. உதய்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவரான கோமி வியாஸ், தனது வேலையை விட்டுவிட்டு, தனது கணவர் டாக்டர் பிரதீக் ஜோஷியுடன் தங்கள் மூன்று குழந்தைகளுடன் லண்டனில் சேரக் குடிபெயர முடிவு செய்து பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த சோகம் அரங்கேறியுள்ளது.
கருகிப்போன கனவு:
விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக அதிலிருந்த டாக்டர் ஜோஷி எடுத்த செல்ஃபியில், அவரும் அவரது மனை ஒரு பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்ததையும், அவர்களின் இளம் இரட்டையர்களும் மூத்த மகளும் அருகருகே அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. சிறுவர்கள் கேமராவைப் பார்த்து சிரிக்க தங்கள் முழு பலத்தையும் காட்டுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் அக்கா சந்தோஷமாக காட்சியளிக்கிறார். சில காலத்திற்கு முன்பாக லண்டன் சென்ற ஜோஷி, தனது குடும்பத்தை அழைத்துச் செல்வதற்காக கடந்த வாரம் பன்ஸ்வாராவிற்கு வருகை தந்துள்ளார்.
இரட்டையர்களான நகுல் மற்றும் பிரத்யுத்தின் வயது 5 மற்றும் மூத்த மகள் மிராயவின் வயது எட்டாகும். ஒட்டுமொத்த குடும்பமும் லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் மேற்கொண்ட பயணம் சோகத்தில் முடிய, அவர்கள் கடைசியாக எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது.




















