Pandian Stores 2: ரூ.10 லட்சத்திற்கு லோனுக்கு பிளான் போடும் மீனா; கர்ப்பமாக இருப்பதாக ஹேப்பி நியூஸ் சொன்ன மயில்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ' சீரியலில் இன்றைய 508ஆவது எபிசோடில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சரவணனிடம் சொல்ல, அவர் என்ன ரியாக்ஷன் கொடுக்கிறார் என்பதை பார்ப்போம்.

கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. குமாரவேல் மற்றும் அரசியின் திருமண நாடகம் ஒரு பக்கம் இருந்தாலும், அரசு வேலைக்கு செந்தில் ரூ.10 லட்சம் பணத்தை தன்னுடைய அப்பாவுக்கே தெரியாமல் மாமனாரிடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்ததால், அரசு வேலை கிடைக்குமா, பாண்டியனுக்கு தெரிந்தால் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்ற பயத்தில் தற்போது வரை உள்ளார்.
இதையெல்லாம் தாண்டி சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு காரணம் தங்கமயிலின் குடும்பம் தான். எப்படியும் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என அடுக்கடுக்காக பல பொய்களை கூறிய நிலையில், தங்கமயில் மாற்றிய உண்மை தெரிய வந்தவுடன் சரவணன் அவரை வெறுக்க துவங்கிவிட்டார்.
இந்த நிலையில் தான் இன்றைய 508ஆவது எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சி இடம்பெற்றுள்ளது. முதலில் மீனாவிடம் ரூ.10 லட்சம் எடுத்த விஷயம் குறித்து தனது அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று செந்தில் கேட்டு கொண்டார். மேலும், எப்படியாவது ரூ.10 லட்சம் பணத்தை வைத்துவிடுவதாகவும் கூறுகிறார். மீனாவை சமாதானப்படுத்த கடைக்கு சென்று ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று அழைக்க அவரோ முடியாது என்று சொல்லி விடுகிறார்.

தொடர்ந்து தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவரிடம் ரூ.10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதற்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்க, அதற்கு அவரோ லோன் போடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். தனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரை வர சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு அடுத்ததாக தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எப்படியாவது தங்கமயிலை வீட்டைவிட்டு விரட்டி விடுவதில் பாக்கியம் குறியாக இருக்கும் நிலையில் அவரது கணவர் கோயிலுக்கு போகலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அப்போது தங்கமயில் வந்து இனிமேல் உனக்கு நான் கஷ்டம் தர மாட்டேன். என்னுடைய கணவர் வந்து என்னை கூட்டிக் கொண்டு செல்ல மாட்டார். ஆதலால் நான் வேறு எங்காவது போகிறேன் என கூறுகிறார்.
இதையடுத்து பாக்கியம் உனக்கு டேட் அதைப் பற்றி தெரியுமா என்று கேட்க, எனக்கு நாள் தள்ளிப்போய்விட்டது என கூறுகிறார். எத்தனை நாட்கள் என்று கேட்க 23 நாட்கள் என்று சொல்ல பின்னர் பிரக்னன்ஸி கிட் வாங்கி வந்து சோதனை செய்ய, தங்கமயில் கர்ப்பமாகி இருப்பது உறுதியாகிறது. இதனால் தங்கமயில் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இது குறித்து தெரியப்படுத்த மயிலும், சரவணனுக்கு போன் போட அவரோ போன் எடுக்கவில்லை. பின்னர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினர். அதில், தான் கர்ம்மாக இருப்பதாகவும் நீங்கள் அப்பாவக போறீங்க என்று சொல்ல குஷியான சரவணன், மறுபுறம் இன்னும் எத்தனை பொய் தான் சொல்லிக் கொண்டே இருப்பீங்க, போனும் பண்ணக் கூடாது, மெசேஜூம் அனுப்ப கூடாது என்று சொல்லியும் ஏன் திரும்ப திரும்ப போன் போட்டு என்னுடைய உயிரை வாங்குற என்று பேசுகிறார். இதனால் தங்கமயிலு அதிர்ச்சி அடைகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.





















