Mohanlal : விஜயைத் தொடர்ந்து அரசியலுக்குள் வருவேனா...நடிகர் மோகன்லால் போல்ட் ரிப்ளை
விஜய் அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் கருத்து சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்

எம்புரான்
மலையாள திரையுலகின் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் மோகன்லால். தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் , ஜில்லா , உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் வழி இவருக்கும் பெரியளவில் தமிழ் ரசிகர்களூம் இருந்து வருகிறார்கள். தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிஃபர் 2 எம்புரான் படத்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன்கள் சர்வதேச அளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோகன்லால் தமிழ் சினிமா பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் பேசினார்.
விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி மோகன்லால்
" விஜய் அரசியலுக்கு வந்தது அவருடைய விருப்பம். அதை முடிவு செய்வதற்கான முழு உரிமையும் அவருக்கு இருக்கிறது. அதில் நான் கருத்து சொல்ல முடியாது. அதே நேரம் அரசியல் என்னுடைய கப் ஆஃப் டீ இல்லை. நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்டால் வரமாட்டேன். அதில் எனக்கு விருப்பமில்லை" என மோகன்லால் தெரிவித்துள்ளார்
சிறந்த சினிமாத்துறை தெலுங்கு தான்
" முன்பெல்லாம் என்னுடைய படங்கள் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகும். ஆனால் இப்போது என்னுடைய படம் நேரடியாக தெலுங்கில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தை இந்தியளவில் வெளியிட முடியவில்லை ஆனால் லூசிஃபர் 2 எம்புரான் படத்தை இந்தியளவில் வெளியிடுவதில் ரொம்ப மகிழ்ச்சி. தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவர்கள். சிறந்த சினிமாத்துறை என்றால் தெலுங்குதான் என மோகன்லால் தெரிவித்தார்
Mohanlal sir about Thalaivar Vijay in his recent interview👏👏Brothers for life🫂👏 #JanaNayagan #Empuraan #TVK #Vijay #TVKITWING pic.twitter.com/NbGoq0dKcr
— TVK HEMA SWETHA🇪🇸 (@Hemaswethaa) March 24, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

