மேலும் அறிய
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
”சட்டமைப்பால் நடத்தப்படுகிற ஒரு நாட்டில் ஒன்றிய அமைச்சரின் வார்த்தையை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன்” - என்றார் அமைச்சர் பி.டி.ஆர்

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
Source : whats app
மக்கள் வரிப்பணத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்பதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சே உதாரணம்: அமைச்சர் பி.டி.ஆர் பதிலடி.
அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பு
பல 10 ஆண்டுகளாக தேசிய அளவில் கல்வியில் சிறந்த விளைவு எங்கு கிடைக்கிறது. எத்தனை சதவிகிதம் படிக்கிறார்கள் எத்தனை நபர்கள் பட்டதாரிகள் ஆகிறார்கள் என்ற எந்த ஒரு அளவுகோல் எடுத்தாலும் பொதுவாக தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் உயர்ந்த இடத்தில் இருக்கிற சூழ்நிலையில் டெல்லியில் கல்விக்கொள்கையினை உருவாக்கி பீகாரிலோ,ராஜஸ்தானிலோ,ஏன் குஜராத்திலோ தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் பாதி அளவிற்கு வர முடியாத மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சியும் அதனால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கமும் அவர்களை விட 10 மடங்கு முன்னேறிய மாநிலத்தை நாங்க சொல்ற கொள்கையைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என சொல்வது உலகத்திலேயே ஆச்சர்யமாக இருக்கிறது. இதனை அதிர்ச்சி உருவாக்கும் செயலாகத்தான் பார்க்க வேண்டும்.
நிறை இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம்
பேரறிஞர் அண்ணா கூறிய படி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு மொழிக்கொள்கை இருமொழிக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி உலக அளவில் இன்றைக்கு நம் இளைஞர்கள் பல சிறந்த பணிகளிலும் அரசு உயர் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். நமது கல்வித்திட்டத்தில் இருமொழிக்கொள்கையில் குறை மட்டும் இல்லை என்பதைத்தாண்டி நிறை இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். இருமொழிக்கொள்கை கூட செயல்படுத்த முடியாத பல மாநிலங்களில் ஒரு மொழியை வைத்து அதையும் கூட சரியாக செயல்படுத்தாத மாநிலங்கள் நீங்கள் எங்களுடைய கொள்கையை தான் பயன்படுத்த வேண்டும் எனச்சொல்வது பொருத்தமற்றது. இதையெல்லாம் தாண்டி சட்டமைப்பின் படி மாநில அரசுக்கென சில உரிமைகள் இருக்கிறது. ஒன்றிய அரசிற்கு சில உரிமைகள் இருக்கிறது. சில பொது பட்டியலில் இருக்கிறது.
ஒன்றிய அமைச்சரின் வார்த்தையை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன்
ஆனால் கொள்கை விருப்பமாக சட்டத்தில் இடம்பெறாத புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து விட்டு நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு ஜனநாயக முறைப்படி சட்டமைப்பு படி 15 வது நிதிக்குழு படி தர வேண்டிய நிதியை தர முடியாது எனச்சொன்னால் இது கொடூரமான சர்வாதிகாரி செய்யும் வேலை. மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் செய்கிறோம் என்பதை ஒன்றிய அமைச்சர் தனது வாயாலே ஒப்புக்கொண்டு விட்டது நல்ல விஷயமாகும். முதலமைச்சர் சட்டமைப்பில் எங்கே இடம் பெற்றுள்ளது என மிக தெளிவாக கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் போய் நிற்க போகிறது. ஒரு மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின் படி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பரிந்துரையை வழங்கப்பட வேண்டிய பணத்தை வழங்காமல் கட்டாயப்படுத்தி வெளிப்படையாக பேசி இருப்பது சட்டமைப்புக்கு விரோதமானது. சட்டமைப்பால் நடத்தப்படுகிற ஒரு நாட்டில் ஒன்றிய அமைச்சரின் வார்த்தையை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் என்றார் .
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 250 ஆண்டுகால ஆச்சரியம்.. சிவகங்கையின் 2-வது மன்னர் பெயர் பொறித்த கல்வெட்டு கண்டெடுப்பு !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும் - அமைச்சர் எல்.முருகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion