Ajith Kumar Racing: ’12H MUGELLO'-விலும் ’தல’ தான்..கொண்டாடும் ரசிகர்கள்! கார் பந்தயத்தில் அசத்தும் அஜித் குமார் ரேசிங்!
Ajith Kumar Racing Video: நடிகர் அஜித் குமார் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீடியோ வைரல் ஆகியது.

iஇத்தாலியில் நடைபெற்ற '12H MUGELLO 2025’ கார் பந்தயத்தில் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதை கொண்டாடும் நடிகர் அஜித் குமார், கார் ரேசர்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மோட்டர் ரேஸும் அஜித்தும்..
நடிகர் அஹித் குமார் தமிழ் திரையுலகின் நட்சத்திரம்.அஜித் குமாரை ஒரு நடிகராக தெரிந்த எல்லாருக்கும் அவருக்கு மோட்டர் ரேஸின் மீது எவ்வளவு ஆர்வம் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கியவர். அவருக்கு மோட்டர் ரேஸிங் மீது அவ்வளவு காதல். ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப் பதிவுசெய்து, தேசிய பந்தய சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா, BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் ஆகிய பந்தையங்களில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறினார். டொனிங்டன் பார்க் மற்றும் நாக்ஹில் சர்க்யூட்களில் போடியம் முடித்த பிறகு FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் செய்தார்.
View this post on Instagram
அப்படியிருக்கையில், எதிர்பாராத விபத்து காரணமாக நடிப்பில் கவனம் செலுத்தினார். இப்போது மீண்டும் கார் பந்தயத்திற்கு திரும்பியுள்ளார். ரசிகர்கள் ‘அஜித் அஜித்’ என்று கொண்டாடும் அளவிற்கு அவருக்கு தனியே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சமூக வலைதளத்திலும் அஜித் ஆக்டிவ் இல்லை என்பதால் அவர் பற்றிய தகவல்கள் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
அஜித்குமார் தனக்கென ஒரு பந்தய அணியை உருவாக்கினார். அந்த அணியுடன் துபாயில் பங்கேற்ற பந்தயத்தில் 3வது இடம் பிடித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தாரென பாராட்டுக்களைப் பெற்றார்.
இத்தாலியில் '12H MUGELLO 2025’ :
அஜித் குமாரின் அணி இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற முகெல்லோ சர்க்யூட் (Mugello Circuit)-ல் நடைபெற்ற போட்டியிலும் மூன்றாவது இடம்பெற்றிருக்கிறது.
12 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி GT992 பிரிவில் அஜித் அணி களமிறங்கியது. மூன்றாவது இடம் பிடித்தது.
Race is done, our man is over the moon.. what a race 🥰🥰 @Akracingoffl #AjithkumarRacing pic.twitter.com/974SUR0VwC
— Nobody (@nobody_offl) March 23, 2025
கொண்டாடிய அஜித் குமார்:
அஜித் குமார் அணி மூன்றவாது இடம் பிடித்ததை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர் இந்திய தேசிய கொடியுடன் அணியினருடன் போடியத்தில் பரிசுடன் சிரித்து வெற்றியை கொண்டாடுவதை ரசிகர்கள் உற்சாகத்துடன் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
Race is done, our man is over the moon.. what a race 🥰🥰 @Akracingoffl #AjithkumarRacing pic.twitter.com/974SUR0VwC
— Nobody (@nobody_offl) March 23, 2025
அஜித் அவருக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், “ அஜித் எல்லாருக்கும் உண்மையாகவே ஒரு இன்ஸ்ப்ரேசன். தான் நேசிக்கும் விசயத்தில் கவனம் செலுத்துகிறார். அவர் வாழ்க்கை கொண்டாடுகிறார்.” அதை காண்கையில் ரசிகனான பெருமையாகயும் மகிழ்ச்சியாக உள்ளது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
Great day for the mutuals#AjithKumarRacing #CSKvsMI pic.twitter.com/0RUFOIiSff
— Trollywood 𝕏 (@TrollywoodX) March 23, 2025
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணி விளையாடும் போட்டி நடைபெற்றது. எம்.எஸ். தோனியின் ஸ்டெம்பிங், சென்னை அணி வெற்றி, அஜித் குமார் கார் ரேஸ் அணி வெற்றி பெற்றது என இனிய நாளாக அமைந்தது என்றும் சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

