Mumbai Indians: தூசியை கூட வைரமாக்கும் பல்தான்ஸ்! மும்பை பட்டை தீட்டிய வீரர்கள்... இதனால தான் அவங்க கெத்து
Mumbai Indians: ஜஸ்பிரீத் பும்ரா முதல் விக்னேஷ் புதூர் வரை மும்பை அணியால் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திறமைமிக்க இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை சிற்பி செதுக்குவது போல செதுக்கி எடுப்பதில் கைதேர்ந்த அணி எது என்றால் அது நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணி என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி ஜஸ்பிரீத் பும்ரா முதல் விக்னேஷ் புதூர் வரை மும்பை அணியால் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஜஸ்பிரீத் பும்ரா:
2013 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் அறிமுகமானர் ஜஸ்பீரித், அவரை வெறும் 10 லட்சத்துக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது, தனது முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பும்ரா, இன்று பும்ரா எப்படிப்பட்ட பந்துவீச்சாளர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்னும் அவசியமில்லை அந்த அளவிற்கு தனது பந்துவீச்சு மூலம் அசத்தி வருகிறார் பும்ரா.
பாண்ட்யா சகோதரர்கள்:
ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ரூணால் பாண்ட்யா இந்த இரு சகோதர்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு சரி ஐபிஎல் அணிகளுக்கும் சரி அப்படி ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு காலக்கட்டத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த இவர்களை மும்பை ஏலத்தில் எடுத்து இன்று உலகிற்கே அவர்களது திறமையை காட்டியுள்ளது.
திலக் வர்மா:
கடந்த மூன்று ஐபிஎல் சீசனாக மும்பை அணிக்காக சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால் அது திலக் வர்மா தான், 2022 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் யாருமே கண்டுக்காத நிலையில் சென்னை அணியும் மும்பை அணியும் போட்டப்போட்டி போட்டது, இறுதியில் மும்பை அணி அவரை 1.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இப்போது திலக் வர்மா இந்திய டி20 மிடில் ஆர்டரின் மிகப்பெரிய தூணாக உள்ளார்.
அகாஷ் மத்வால்:
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வால் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூர்ய குமார் யாதவுக்கு மாற்று வீரராக களம் கண்டார். அடுத்த சீசனில் 14 விக்கெட்டுகளை எடுத்தார் அசத்தினார். தற்போது அவர் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
மயங்க் மார்க்கண்டே:
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஒரு இளம் லெக் ஸ்பின்னரை வைத்து உலுக்கி எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி, யாரா இந்த பையன் முத்துப்பாண்டியவே சாச்சுட்டான் சொல்ற மாதிரி தோனியின் விக்கெட் எடுத்தார் மார்க்கண்டே.
இதுமட்டுமில்லாமல் நேஹல் வதேரா, ராகுல் சஹார் போன்ற வீரர்களின் திறமையை வெளிப்படுத்த மும்பை அணி முக்கிய காரணமாக இருந்தது.
விக்னேஷ் புதூர்:
ஐபிஎல் 2025-ல் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு இளம் சுழற்பந்து வீச்சாளரை வைத்து மீண்டும் தண்ணி காட்டியது மும்பை அணி, கேரளாவை சேர்ந்த இவர் இது வரை மாநில அணிக்காக கூட விளையாடியது கிடையாது, ஆனால் அவரின் திறமையை அடையாளம் கண்டு மும்பை அணி அவரை தென் ஆப்பிரிக்கா வரை அனுப்பி ரஷித் கானுடன் பயிற்சி மேற்க்கொண்டு பட்டை தீட்டியுள்ளது.
இப்படி பல புதிய வீரர்களை கண்டுபிடித்து அவர்களை மெறுகேற்றிவருவதால் தான் மும்பை ஐபிஎல்லில் 5 கோப்பைகளை வென்று காட்டியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

