புதுசு கண்ணா... இது ரொம்பவே புதுசு..ரூ.5 கோடிப்பு... திருச்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி
சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகள் இருந்தது. அதை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

திருச்சி: புதுசு கண்ணா... இது ரொம்பவே புதுசு. இப்படிப்பட்ட ஒரு பொருள் நம்ம திருச்சி மாவட்டத்திற்கு புதுசு என்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம். அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில் ஏராளமானோர் தங்கம் கடத்தியதாக சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட பொருள் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது என்ன பொருள் என்று ஆராய்ந்த அதிகாரிகளுக்கு அதன் பெயரும், அதன் மதிப்பும் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு இப்படிப்பட்ட ஒரு பொருள் கேள்விப்படாத பொருள் என்கின்றனர். அப்படி அந்த பொருளின் மதிப்பு எவ்வளவு தெரியுங்களா? ரூ.5 கோடியாம்.
தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதன் காரணமாக தங்கத்தை விமானங்கள் வழியாக வரி கட்டாமல் கடத்துவது அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தும் குருவிகள் சிக்கினால் கண்டிப்பாக சிறையில் காலத்தை கழிக்க வேண்டியதிருக்கும். அப்படி கடத்தி சிக்கி, சிறையில் அல்லல்படுபவர்களும் அதிகம் பேர் உள்ளனர். தற்போது திருச்சி விமான நிலையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திக் கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
திருச்சி விமான நிலையத்தை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தப்பட்டு அதிகாரிகளின் சோதனையில் சிக்கியது. இதேபோல் சில நாட்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சிக்கு வந்தது. வழக்கம் போல், இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகள் இருந்தது. அதை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதவிதமான போதைப் பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா போன்ற இந்த ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் திருச்சிக்குள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

