BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
BCCI Cash Prize India's victorious ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

BCCI Cash Prize India's victorious ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அனி சாம்பியன் பட்டம் வென்றது.
பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “ ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025-ஐ வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகிழ்ச்சியடைகிறது. இந்த நிதி அங்கீகாரம் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் மற்றும் ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, சுமார் 125 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத்தொகையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ வாழ்த்து
அறிவிப்பில், "தொடர்ச்சியாக ஐசிசி பட்டங்களை வெல்வது சிறப்பு வாய்ந்தது, மேலும் இந்த வெகுமதி உலக அரங்கில் இந்திய அணியின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை அங்கீகரிக்கிறது. இந்த ரொக்க விருது, திரைக்குப் பின்னால் அனைவரும் செய்யும் கடின உழைப்புக்கான அங்கீகாரமாகும். ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் இது எங்களுக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பையாகும்.மேலும் இது நம் நாட்டில் நடைமுறையில் உள்ள வலுவான கிரிக்கெட் சூழலை எடுத்துக்காட்டுகிறது." என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) March 20, 2025
BCCI Announces Cash Prize for India's victorious ICC Champions Trophy 2025 contingent.
Details 🔽 #TeamIndia | #ChampionsTrophy https://t.co/si5V9RFFgX
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா அபாரம்:
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைமையேற்று நடத்திய சாம்பியன்ஸ் ட்ராபியில், கேப்டன் ரோகித் சர்மாவின் திறமையான மற்றும் சாதுர்யமான தலைமையின் கீழ், இந்திய அணி போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. வங்கதேசத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது பயணத்தை தொடங்கியது, பின்னர் பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கள் வேகத்தைத் தொடர்ந்தது. இறுதிப்போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியான பேட்டிங் மூலமாக, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்த்ரா தொடர் நாயகனாகவும், இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

