விவாகரத்து கேட்டும் ஒரே காரில் பயணம்...திரைப்பட காதலர்கள் போல் நடந்துகொள்ளும் ஜி.வி சைந்தவி
GV Prakash Divorce : விவாகரத்து வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்

ஜி.வி சைந்தவி
கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடியாக இருந்தது ஜி.வி சந்தவி. பள்ளி காலத்தில் இருந்த் நண்பர்களாக இருந்து வந்த இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். ஜிவி இசையில் பல உருக்கமான பாடல்களை சந்தவி பாடியிருக்கிறார். இருவரும் சேர்ந்து பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டும் ஜி.வி சைந்தவி தாங்கள் விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தார்கள். இந்த விவாகரத்து தொடர்பாக ஜிவி பற்றி பல தகவல்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த முடிவு இருவரும் பரஸ்பரம் பேசி எடுத்தது என்பதை இருவரும் உறுதிபடுத்தினார்கள்.
பிரிந்த பின்னும் குறையாத காதல்
திருவண உறவில் இருந்து வெளிவந்தாலும் ஜி.வி மற்றும் சைந்தவி ஒருத்தர் மீது ஒருத்தர் அளவுகடந்த மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார். இருவரும் சேர்ந்து காண்சர்டில் சேர்ந்து பாடியது ரசிகர்களை கவர்ந்தது. விவாகரத்திற்கு பின்னும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜர்
ஜி.வி சைந்தவி இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜ்ராகி விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்கள். இந்த வழக்கும் நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. ஜி.வி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதி முன் தெரிவித்தார்கள் . இந்த விசாரணைக்கு இருவரும் ஒரே காரில் வந்து ஒரே காரில் சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.வி யின் தனிப்பட்ட வாழ்க்கையே ஒரு அழகான காதல் படம் போல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்
ஜிவி இசையமைத்துள்ள படங்கள்
ஜி வி பிரகாஷ் தற்போது விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் மற்றும் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது அவரது 100 ஆவது படம் என்பது குறிப்பிடத் தக்கது

