Morning Headlines: சென்னையை சூழ்ந்த புகைமூட்டம்.. மீண்டும் யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி..! முக்கியச் செய்திகள்..
Morning Headlines January 14: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- சென்னையை சூழ்ந்த புகைமூட்டம்.. சுவாசிக்க தகுதியற்றதாக மாறிய காற்று... காரணம் என்ன?
சென்னையில் போகி பண்டிகை ஒட்டி காற்றின் தரம் பல பகுதிகளில் மோசமாகி வருகிறது. ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். மேலும் படிக்க..
- பரபரக்கும் அரசியல் களம்.. இன்று முதல் மீண்டும் யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி..!
ராகுல் காந்தி இன்று முதல் தன்னுடைய “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” நிகழ்ச்சியை தொடங்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதயாத்திரையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க..
- நாங்க சின்ன நாடுதான்; அதனால் மிரட்டுவீங்களா? - இந்தியாவை சாடுகிறாரா மாலத்தீவு அதிபர்?
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஒயாமல் தான் உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கான 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நாடு திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல சிறிய தீவுகள் இருந்தாலும், 900,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேகமான பொருளாதார மண்டலத்தை மாலத்தீவு கொண்டுள்து. இந்தப் பெருங்கடலின் பெரும் பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தப் பெருங்கடல் குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல. இந்த (இந்திய) பெருங்கடல் அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. நாங்கள் யாருடைய கொல்லைப்புறத்திலும் இல்லை. மேலும் படிக்க..
- 27-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு நிவாரணம்.. அமித்ஷா அளித்த வாக்குறுதி.. திமுக எம்பி டி.ஆர். பாலு பேட்டி
கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத அளவில் கொட்டிய கனமழையால் வடமாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீள தொடங்கின. இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் முன்பே, தென்மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவில் பேய்மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். மேலும் படிக்க..
- I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜகவை, வீழ்த்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான தேசிய மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய I.N.D.I.A எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்கனவே 4 முறை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டணியின் இலக்கு என்ன, எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவது என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் படிக்க..