மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: கடந்த 24 மணிநேர நிகழ்வுகளை மொத்தமாக அறிய.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுக்க 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல் - சுங்கக் கட்டண உயர்வுகள் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை
- காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - விவசாயிகள் கவலை
- சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடக்கம் - 2025ம் ஆண்டு நவம்பரில் பணிகள் முடியும் என தகவல்
- அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் - தெலங்கானா அரசு அதிகாரிகள் சென்னை வந்து திட்டம் குறித்து கேட்டறிந்தனர்
- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கொட்டி தீர்த்த கனமழை - ஊட்டியில் காய்கறி தோட்டங்களை சூழ்ந்த வெள்ளம்
- திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் மீது புகாரளித்த விவகாரம் - உண்மைத்தன்மை குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை
- விருதாச்சலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை - சார்பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல்
இந்தியா:
- செப்டம்பர் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் - ஒரே நாடு ஒரே தேர்தல் அல்லது பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு
- I.N.D.I.A கூட்டணிக்கு என பொதுவான ஒரு சமூக வலைதள குழுவை உருவாக்க முடிவு - சமூக வலைதள குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என தகவல்
- I.N.D.I.A கூட்டணிக்கு இரண்டாவது நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் இன்று நடைபெறுகிறது - கூட்டணிக்காக லோகோ இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு
- சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் ஏவப்பட உள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தின் கவுன்டவுன் இன்று தொடங்குகிறது
- நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்தது விக்ரம் லேண்டர்
- ஜி20 உச்சி மாநாட்டிற்காக தயாராகும் தலைநகர் டெல்லி - குரங்குகளில் தொல்லையை சமாளிக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்
- அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட 100 கோடி அமெரிக்க டாலர்கள் யாருடையது? - பிரதமர் மோடி விளக்கமளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
- காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 8 தீவிரவாதிகளில் ஒருவர் அரசுப் பணியில் இருப்பது தெரிய வந்துள்ளது
உலகம்:
- பிலிப்பைன்ஸ் நாட்டில் துணி ஆலையில் பயங்கர தீ விபத்து - 16 பேர் உடல் கருகி பலி
- பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 9 ராணுவ வீரர்கள் பலி
- இங்கிலாந்து பிரதமரின் அமைச்சரவயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு பதவி
- ஏவுகணை ஒத்திகை பயிற்சி - தென் கொரியாவிற்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா
விளையாட்டு:
- டைமண்ட் லீக் தடகள போட்டி - ஈட்டி எறிதலில் இரண்டாவது இடம் பிடித்தார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
- உலகக்கோப்பை தொடர் - நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இந்திய அணி போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று விற்பனை
- ஆசியக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion