Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்த நிதியாண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளது. அதே சமயம் ஆப்பிள் நிறுவனத்தால் தமிழ்நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகிறது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான TCS எனப்படும் Tata Consultancy Services, தனது ஊழியர்களில் 12,000 பேரை மார்ச் 2026-க்குள் படிப்படியாக நீக்க உள்ளதாக அறிவித்து, அந்நிறுவன ஊழியர்களுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. மறுபுறம், ஆப்பிள் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்க உள்ள ஆலைகளால் பெரும் அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த டிசிஎஸ் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான TCS எனப்படும் Tata Consultancy Services, தனது ஊழியர்களில் 12,000 பேரை மார்ச் 2026-க்குள் படிப்படியாக நீக்க உள்ளதாக அறிவித்து, அந்நிறுவன ஊழியர்களுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. மறுபுறம், ஆப்பிள் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்க உள்ள ஆலைகளால் பெரும் அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசிஎஸ் நிறுவனம் உலகின் பல முக்கிய நாடுகளில் தனது கிளைகளை கொண்டு, பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ள நிலையில், தற்போது, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் உலகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். 2025 நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 12,000 ஊழியர்களை, வரும் ஆண்டில், அதாவது 2026 மார்ச் மாதத்திற்குள் படிப்படியாக பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது, அதன் பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2 சதவீதமாகும். இந்நிறுவனம், ஆண்டுக்கு சுமார் 283 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறது. நாடு முழுவதும் அதிக பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஏன் இந்த முடிவு.?
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தான் தற்போது உலக அளவில் ஏராளமான பணியாளர்களுக்கு எதிரியாக வந்துள்ளது. ஆம், இத்தொழில்நுட்பத்தால், பலரது வேலையை அதுவே எளிதாகவும், விரைவாகவும் செய்து விடுவதால், அந்தந்த வேலைகளை செய்யும் பணியாளர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகில், பல்வேறு துறைகளிலும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நிறுவனங்கள், ஆலைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பணத்தை மிச்சப்படுத்தவும், வேலைகளை மிக விரைவாக முடித்துக்கொடுக்கவும் இத்தொழில்நுட்பம் உதவுவதால், பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது டிசிஎஸ் நிறுவனம் எடுத்திருக்கும் முடிவிற்கும் ஏஐ ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த முடிவு, ஊழியர்களின் திறமை பொருத்தம் இல்லாமை மற்றும் அவர்களை பணியில் அமர்த்த முடியாத சூழலால் ஏற்பட்டடுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கிருத்திவாசன், தனியார் ஊடகம் ஒன்றில் பேசியபோது தெரிவித்துள்ளார். இந்த பணி நீக்கம், நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை அதிகம் பாதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நிறுவனத்தில் ஊழியர்கள் தேவை குறையவில்லை என்றும், உயர் திறமை கொண்டவர்களை தேடி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நற்செய்தி கொடுத்த ஆப்பிள் - 60,000 பேருக்கு வேலை
உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தால், தமிழ்நாட்டிற்கு நற்செய்தி கிடைத்துள்ளது.
ஆம், அப்பிள் நிறுவனத்திற்கான மின்னணு உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதற்காக, 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், இந்த உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு உருவாவதாகவும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.





















