Madhampatty Rangaraj : 2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய்.. சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ் ! | Joy Crizilda
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஜாய் புகைப்ப்டங்களை லீக் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்னே ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஜாய் புகைப்ப்டங்களை லீக் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகராக மெஹந்தி சர்கஸ் திரைப்படம் மூலம் மக்களால் அறியப்பட்டாலும், தனது சமையல் கலையால் குக் வித் கோமாளியில் நடுவராக வந்து மக்களிடம் பரிட்சையமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஷில்டாவுடன் காதலில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஜாயும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலன் என குறிப்பிட்டு ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். எனினும் ஸ்ருதி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வந்த காதலர் தினத்தை இருவரும் சேர்ந்து கொண்டாடும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டதோடு, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் அவர் பெயரை மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
இது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது மனைவி ஸ்ருதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.இந்நிலையில் தான் நேற்று இரவு மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்கராஜ் எனக்குறிப்பிட்டு தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஜாய் கிரிஷில்டா புகைப்படங்களை வெளியிட்டார்.இதுதொடர்பாக ஜாய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தற்போது தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக்வும்” அறிவித்து கவனம் ஈர்த்தார்.
எளிய முறையில் நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு, கோயிலில் ஜாய் மற்றும் ரங்கராஜின் திருமணம் அரங்கேறியதாக தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் தான் ஜாய்க்கும் ரங்கராஜுக்கும் சில மாதங்களுக்கு முன்பே ரகசிய திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஜாய் கோபத்தில் திருமண புகைப்படங்களை லீக் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் முதல் மனைவி ஸ்ருதி உடனான விவாகரத்து இன்னும் சட்டப்பூர்வமாக உறுதியாகாத நிலையில், அவரும் ரங்கராஜ் மீது சட்டப்படி புகார் அளிக்க முடிவெடுத்துள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.





















