MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
5 ஆண்டுகளுக்கும் மேலாக கூடுதலாக ஒவ்வோர் ஆண்டு சேவைக்கும் கொடுக்கப்படும் கூடுதல் ஓய்வூதியமும் அதிகப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதேபோல, தினசரி அலவன்ஸ் மற்றும் ஓய்வதியத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக எம்.பி.க்களுக்கு 1 லட்சம் ரூபாயாக இருந்த மாத ஊதியம், 1.24 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி அலவன்ஸ், 2 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியமும் 21 ஆயிரம் ரூபாயில் இருந்து 31 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூடுதலாக ஒவ்வோர் ஆண்டு சேவைக்கும் கொடுக்கப்படும் கூடுதல் ஓய்வூதியமும் அதிகப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாயாக இருந்த கூடுதல் ஓய்வூதியம் 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Centre has notified an increase in the salary, daily allowance and pension of Members and former Members of Parliament.
— All India Radio News (@airnewsalerts) March 24, 2025
The monthly salary for Members of Parliament has been increased from Rs 1 lakh to Rs. 1.24 lakh.
The daily allowance has been raised from Rs 2,000 to Rs… pic.twitter.com/BKVesOe45P
ஏப்ரல் 1, 2023 முதல் அமல்
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளின் ஊதிய உயர்வும் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த உத்தரவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை கூடுதல் செயலர் சத்திய பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.

