அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்...
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அட்லீ படத்தில் வில் ஸ்மித்
ஜவான் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். அல்லு அர்ஜூன் , தீபிகா படூகோன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரூ 800 கோடி செலவில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் பேட் பாய்ஸ் , செவன் பவுண்ட்ஸ் , ஐ ஆம் லெஜண்ட் , தி பர்சூட் ஆப் ஹேப்பினஸ் போன்ற சிறந்த படங்களில் நடித்த வில் ஸ்மித் உலகளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் அவர் முதல் முறையாக இந்திய படத்தில் நடிக்க இருக்கிறார்
அல்லு அர்ஜூன் மற்றும் தீபிகா படூகோனுக்கு படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இந்த வீடியோ இந்த படத்தின் பிரமாண்டத்திற்கு ஒரு டிரெய்லர் போல் அமைந்தது. அதே போல் விரைவில் வில் ஸ்மித் படத்தில் இணைந்துள்ளதை அறிவிக்க படக்குழு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடும் என எதிர்பார்க்கலாம்
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
படக்குழு
அட்லீ இயக்கும் இப்படத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் பணியாற்ற இருக்கின்றன. ஹாலிவுட் பிரபல லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனம் இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. Spectral motion என்கிற மற்றொரு முன்னணி நிறுவனம் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறது. வித்தியாசமான உயிரினங்களின் தோற்றங்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் பணி. பிரபல ஹாலிவுட் படமான ஹெல்பாய் உட்பட பல படங்களின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தது இந்த் நிறுவனமே . இது தவிர்த்து Fractures FX , ILM technoprops , legacy effects போன்ற முன்னணி விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்க இருக்கிறார் அட்லீ. கேப்டன் அமெரிக்கா , ஸ்பைடர் மேன் , ஐயன் மேன் , அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர்ஸ் ஹீரோஸ் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் கதையை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றுவதை ஒரு சவாலாக அவர்கள் கருதுகிறார்கள்.





















