நாயகனை பார்த்து ரஜினி சொன்ன வார்த்தை.. பிரபல இயக்குநர் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்
நடிகர் ரஜினி கமல்ஹாசன் நடித்த ஒரு படத்தை பார்த்து மிகவும் வியந்து பேசியதாக இயக்குநர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கமலும், ரஜினியும் ஆரம்ப காலகட்டத்தில் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையிலே இருந்துள்ளன. ரஜினி வில்லனாகவும் கமல் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றனர். பின்னர் கமல் கொடுத்த அட்வைஸ் தான் என் வாழ்க்கையை மாற்றியது என ரஜினிகாந்த் பல மேடைகளில் தெரிவித்துள்ளார். தற்போது வரை இருவருக்குமான நட்பு குறையவில்லை. நடிகர் ரஜினி கமலை திரையுலகில் அவர்தான் எனக்கு அண்ணன் எனக் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இருதுருவங்கள் ரஜினி, கமல்
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு கமல், ரஜினி என்ற அடையாளத்தை பதித்துள்ளனர். இருதுருவரங்களாக தங்களது சினிமா பயணத்தில் சளைத்தவர்கள் இல்லை. கமலின் திறமையை மட்டும் அல்ல அவரது நடிப்பையும் பாராட்ட தயங்காதவர் ரஜினி. தசாவதாரம் படப்பிடிப்பிற்கு சென்று கமலுக்கு சர்ப்ரைஸ் விசிட் தந்தவர் ரஜினி. அதேபோன்று ரஜினி நடிக்கும் படங்களை பார்த்து கமலும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
கமலின் படைப்புகளை பாராட்டிய ரஜினி
ஹேராம் படத்தை பார்த்த ரஜினி, அப்படத்தை பார்த்து மிரண்டுவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஹேராம் இருக்கிறது. இதுவரை 40 முறை பார்த்துள்ளேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசியல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த பிரம்மிப்பு போகவில்லை என தெரிவித்தார். இந்நிலையில், கமல் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் படம் என போற்றப்படும் நாயகன் படத்தை பார்த்து ரஜினி கூறியதை பிரபல இயக்குநர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலுநாயக்கர் என்னும் போதை
இயக்குநர் வாசு ரஜினிகாந்தை வைத்து மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குநர் வாசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நாயகன் மாதிரி கேங்ஸ்டர் படங்களில் நீங்கள் நடிக்கவில்லை. நீங்க அந்தமாதிரி படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினி சாரிடம் தெரிவித்தேன். அதற்கு ரஜினிகாந்த் ஒரு சம்பவத்தை எனக்கு பகிர்ந்திருந்தார். அதை கேட்டு எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஆகிடுச்சு. நாயகன் படத்தை பார்த்து விட்டு வந்து வீட்டில் மது அருந்தினேன். முதல் ரவுண்ட் மது அருந்தினேன் போதை ஏறலை. 2வது முறையும் போதை ஏறலை. 3வது முறையும் போதை ஏறலை. உடனடியாக கமல்ஹாசனுக்கு போன் செய்து நான் அருந்திய மதுவை விட, வேலு நாயக்கரின் போதை அதிகமாக இருக்கிறது என ரஜினிகாந்த் கமல்ஹாசனிடம் கூறியதாக தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.





















