மேலும் அறிய
வெயிலில் நின்றால் வைட்டமின் D கிடைக்கும்... ஒதுங்கி நின்ற தொண்டர்களை ஒன்றிணைத்த செல்லூர் ராஜூ
தமிழக அரசு சாட்டையை சுழற்றி இருக்கிறது. இதோடு நிற்கக்கூடாது குற்றம் செய்தவர்கள் சிறையில் அடைக்கவேண்டும். - செல்லூர் ராஜூ பேச்சு.

செல்லூர் ராஜூ
Source : whats app
மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும் என செல்லூர் ராஜூ காட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி முறைகேடு - செல்லூர் ராஜூ பங்கேற்பு
மதுரை மாநகராட்சியில் கட்டட வரிவிதிப்பில் சுமார் 150 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி மண்டல தலைவர்களை முதல்வர் உத்தரவின்படி ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இந்த சூழலில் மாநகராட்சி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மாநகர் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் பெத்தனியபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க.,விற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது.
பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் தற்போது வாய் திறக்கவில்லை
தொடர்ந்து ஆர்ப்பாட்ட மேடையில் செல்லூர் கே.ராஜூ பேசுகையில்...," சுட்டெரிக்கும் சூரியனை தாண்டி இங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 2026-ல் சூரியனை வெற்றி பெறப்போவது நாம் தான். அதிமுக ஆர்ப்பாட்டத்தால் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யவைக்கப்பட்டுள்ளனர். இனி உள்ளாட்சி மன்றங்களில் முறைகேடுகளை செய்ய முடியாது. முறைகேடு செய்யவிட மாட்டோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெற்றபோது, குற்றம் சாட்டிய அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் தற்போது வாய் திறக்கவில்லை. வீட்டுவரி, பாதாளசாக்கடை என மாநகராட்சியில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. 100 ரூபாய் கட்டணத்திற்கு 15 ஆயிரம் லஞ்சம் பெறுகின்றனர்.
செல்லூர் ராஜூ பெற்ற 28 விருதுகள்
தற்போது ராஜினாமா செய்த மண்டல தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கழிவுநீர் பம்பிங் ஸ்டேசன் செயல்படவில்லை. இதனால் மதுரை மாநகர் சாக்கடை தூய்மையான, வைகை ஆற்றில் கலக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்தில் நான்கு மண்டலத்தில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தோம். தற்போது 5 மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். பெரிய வணிக நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணமாக வீட்டு வரியை போடுகின்றனர். நான் 28 விருதுகள் வாங்கியுள்ளேன் தற்போது உள்ள திமுக நிர்வாகம் ஒரு விருது வங்கியுள்ளதா?
தவறுகள் செய்யவிடமாட்டோம்
மதுரையில் இருக்கும் 2 அமைச்சர்கள் என்ன செய்தார்கள். முறைகேடுகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா? மதுரை கிழக்கில் கூட சூரியன் உதிக்காது. தமிழ்நாடு முழுவதும் சூரியன் இனி அஸ்தமனம் தான். அதிமுக அநியாயத்திற்கு துணை போகாது. நாங்கள் தவறு செய்ய மாட்டோம், யாரையும் தவறு செய்யவிடமாட்டோம். தவறு செய்வர்களை காட்டிக் கொடுத்துவிடுவோம். தமிழக அரசு சாட்டையை சுழற்றி இருக்கிறது. இதோடு நிற்கக்கூடாது குற்றம் செய்தவர்கள் சிறையில் அடைக்கவேண்டும். மதுரை கன்னகி மண்ணில் நீதி கிடைத்துவிட்டது. மாநகராட்சி விசயத்தில் சி.பி.ஐ.,விசாரணை வேண்டும்” என்றார்.
வெயிலில் வைட்டமின் D உள்ளது
வெயில் அதிமகா இருந்ததால், ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன் அதிமுக தொண்டர்கள் கூட்டத்தைவிட்டு ஒதுங்கி நின்றனர். இதைப் பார்த்த செல்லூர் ராஜூ தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது..” வெயிலில் நின்றால் வைட்டமின்-D கிடைக்கும். வெயில் பட்டால் கருகியா போவோம்” என பேசி, ஒதுங்கி நின்ற தொண்டர்களை தானே களத்தில் இறங்கி ஒருங்கிணைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















