இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
ரெட்ரோ பட நிகழ்ச்சியில் பழங்குடி சமுகத்தினர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம்
கெளதம் தின்னனூரி இயக்கத்தில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பாக்யஶ்ரீ போர்ஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள கிங்டம் படத்தின் ப்ரோமோஷன்கள் நடைபெற்று வருகின்றன. நேர்காணல் ஒன்றில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் தனது கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ளார்
எனக்கு பேசுவதே பிடிக்காது
நான் ஒரு நடிகன். எந்த ஒரு துறையிலும் நான் நிபுனர் கிடையாது. ஒரு நடிகனாக பொது விஷயங்களில் கருத்து சொல்வது எனக்கு சிக்கல்களையே ஏற்படுத்துகிறது. எல்லாருக்கும் ஏதோ ஒரு சார்பு இருக்கிறது. ஒரு தரப்பில் இருந்து பேசினால் இன்னொரு தரப்பு என்னை திட்டுவார்கள். நான் சார்பு எடுக்க விரும்பவில்லை. முடிந்த அளவிற்கு எல்லா தரப்புகள் பற்றியும் விவாதித்து ஒரு தீர்வை நோக்கியே செல்ல விரும்புகிறேன். ஆனால் அப்படி இருக்கை ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாரும் நம்மை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் நான் பேசியது எழுத்து வடிவில் வரும் போதே தவறாக புரிந்துகொள்ளப் படுகிறது அதனால் நான் இனிமேல் பொது விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்னால் ஒரு விஷயத்தை நேரடியக சொல்ல முடியாது பல விஷயங்களை யோசித்து தான் நான் பேசுவேன். ஆனால் கருத்து சொல்வதற்கு ஏற்ற சூழல் இங்கு இல்லை. பேசாமல் இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் என்னுடைய தொழில் அப்படியானது. என் படத்தை ப்ரோமோட் செய்ய நான் பேச வேண்டியதாக இருக்கிறது. ஒன்று நீங்கள் எந்த விஷயத்திற்கு கருத்து சொல்லாமல் சிரித்தபடியே இருந்துகொள்ளலாம். இல்லையென்றால் பி.ஆர் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளலாம்
பழங்குடி மக்கள் பற்றி விஜய் தேவரகொண்டா
ரெட்ரோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விஜய் தேவர்கொண்டாவின் கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டது. காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி பேசும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்ந்தை ஆதிவாசிகள் போல் நடந்துகொள்கிறார்கள் என்று கூறினார். அவரது இக்கருத்து பழங்குடி மக்களைப் அவமரியாதை செய்வதாக பலரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் விஜய் தேவரகொண்டா மீது SC/ST பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் யாரையும் புன்படுத்துவதற்காக தான் பேசவில்லை என விஜய் தேவரகொண்டா விளக்கமளித்தார்.





















