மேலும் அறிய
Advertisement
Today Headlines: 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகளை மொத்தமாக அறிய! காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என தப்புக் கணக்கு போடுவோருக்கு, இந்தியாவில் உள்ள மக்கள் பாடம் புகட்டுவார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- முதியோர் உதவித்தொகையை ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் - மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் பட்டியலில் தகுதிவாய்ந்த நபர் ஒருவர் கூட விடுபடக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
- தமிழ்நாட்டின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது கர்நாடக அரசு - கபினி, கே.ஆர். எஸ். அணைகளில் விநாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றம்
- கடன் தொல்லையால் விபரீதம் - கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
- பணிமனை மறுசீரமைப்பு பணி - செங்கோட்டை, குருவாயூர் ரயில்கள் இன்று மானாமதுரை வழியாக இயக்கம்
- நெல்லையில் மொத்தநகை வியாபாரி வீட்டில் 1.5 கிலோ நகைகள் கொள்ளை - காவல்துறை தீவிர விசாரணை
இந்தியா:
- மணிப்பூர் வன்முறையில் பெண்களை வன்கொடுமைப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது - இதுவரை சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்த காவல்துறை
- நாடு முழுவதும் காலியாக உள்ள பல் மருத்துவ கல்லூரிகளில் 10 முதல் 55 சதவிகித இடங்கள் - பி.டி.எஸ்., எம்.டி.எஸ் படிப்புகளில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்
- 22 மொழிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தயாரிக்க அனுமதி - எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை கற்பிக்க புதிய திட்டம்
- ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் 41 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை - கேட்பாரின்றி புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்கள்
- மகாராஷ்டிராவில் ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர் - போலீசாரின் விசாரணையில் ரூ.14 கோடி ரொக்கம், 4 கிலோ தங்கம் மீட்பு
- உத்தரபிரதேசத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் காவல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து - 4 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி
- ஆந்திராவில் கோர விபத்து - பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதி 6 பேர் பலி
உலகம்:
- வங்கதேசத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி, 35 பேர் காயம்
- டாலர், யூரோ கரன்சிகளை போல இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த ஆலோசனை - அந்நாட்டு நிதியமைச்சர் தகவல்
- மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த வகையிலும் உதவவ்ல்லை - புதின் விமர்சனம்
- மெக்சிகோவில் தவறான நடத்தையால் வெளியேற்றப்பட்ட நபர் பாருக்கு தீ வைத்த சம்பவம் - பழிவாங்கும் செயலால் 11 பேர் பலி
- செயற்கை நுண்ணறிவின் தாக்கம் - இந்தியாவுடன் இணைய பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் அறிவுறுத்தல்
விளையாட்டு:
- இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி - 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 209 ரன்கள் பின் தங்கியுள்ளது
- கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறியது இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி
- இளையோர் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி - இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
- இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 4வது போட்டி - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion