இன்று முதல் காலவரையற்ற போராட்டம்; சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் அறிவிப்பு- என்ன காரணம்?
காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் இன்று (31.07.2025) காலை முதல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டடத்தின் முன்பாக நடைபெற உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களின் ஊதியத்தை குறைக்க எடுக்கப்படும்நடவடிக்கையை கைவிடக்கோரி காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் இன்று (31.07.2025) காலை முதல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டடத்தின் முன்பாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக அலுவலர் பேரவை, சென்னைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச்சங்கம், சென்னைப் பல்கலைக்கழக நான்காம் பிரிவு ஊழியர் நலச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொதுக்குழு கூட்டம்
30.07.2025 அன்று சென்னைப் பல்கலைக்கழக அலுவலர் பேரவை, சென்னைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச்சங்கம், சென்னைப் பல்கலைக்கழக நான்காம் பிரிவு ஊழியர் நலச்சங்கம் சார்பில் ஆகியவற்றின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சென்னைப்பல்கலைக்கழக அலுவலர்களின் ஊதியத்தை குறைக்க எடுக்கப்படும்நடவடிக்கையை கைவிடக்கோரி காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் இன்று (31.07.2025) காலை முதல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டடத்தின் முன்பாக நடைபெற உள்ளது.
போராட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வலியுறுத்தல்
ஆதலால் சென்னைப் பல்கலைக்கழக அலுவலர் பேரவை, சென்னைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச்சங்கம், சென்னைப் பல்கலைக்கழக நான்காம் பிரிவு ஊழியர் நலச்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல இன்று (ஜூலை 31) காலை முதல் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அனைத்து பிரிவுகளின் (தேர்வுத் துறை (Regular and IDE), தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை மற்றும் அனைத்து வளாக நூலகங்கள்) அனைத்து அலுவலர்களும் இந்தப் போராட்டத்தில் உறுதியாக பங்கேற்க வேண்டும் என்று அழைக்கப்பட்டுள்ளது.






















